உலகம்

'லிட்டில் பிரின்சஸ்' முதலையை முத்தமிட்டு மணந்த மேயர்.. மெக்சிகோவில் நடந்த விநோதம்!

'லிட்டில் பிரின்சஸ்' முதலையை முத்தமிட்டு மணந்த மேயர்.. மெக்சிகோவில் நடந்த விநோதம்!

JananiGovindhan

வெள்ளை நிற கவுன் அணிவித்து, பூச்சூடி அலங்கரிக்கப்பட்ட குட்டி முதலையை முத்தமிட்டு கரம்பிடித்திருக்கிறார் மெக்சிகோவின் நகர மேயர்.

விநோதமான செயல்கள், சம்பவங்கள் குறித்த வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் எப்போதுமே பஞ்சமிருக்காது. அந்த வகையில்தான் இந்த மேயர் முதலை திருமணமும்.

மத்திய மெக்சிகோவின் தென்மேற்கே இருக்கும் ஒரு சிறிய நகரம்தான் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹ்யூகோ சோசா. இவர்தான் பாரம்பரிய முறைப்படி 7 வயதுடைய ஒரு பெண் முதலையை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.

ALSO READ: 

மழை பெய்து வளம் செழிப்பதற்காக இந்தியாவில் கழுதை, தவளை போன்ற உயிரிணங்களுடன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வைபோலத்தான் மெக்சிகோவின் இந்த நகரத்திலும் நடத்தப்பட்டிருக்கிறதாம்.

இந்த சடங்குகள் நூற்றாண்டுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தில் ஓக்ஸாகாவின் ஹுவேவ் மற்றும் சோண்டல் ஆகிய பழங்குடியினர்கள் பின்பற்றி வந்ததாம்.

லிட்டில் பிரின்சஸ் போன்று வெள்ளை நிற கவுன் உடுத்தப்பட்டு, பூ வைத்து அலங்கரிக்கப்பட்ட அந்த முதலையை கடவுளின் அம்சமாக கருதி அவருக்கு முத்தமிட்டு மணமுடித்துக் கொள்கிறார் அந்த மேயர்.

அந்த திருமணத்துக்கு பிறகு அப்பகுதி மக்கள் முதலையை தோலில் சுமந்தபடி பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுச் சென்றிருக்கிறார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள மேயர் விக்டர், “இயற்கையிடம் மழை, உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை வேண்டி பிரார்த்தித்து இந்த சடங்கை செய்கிறோம். இது காலம் காலமாக நாங்கள் பின்பற்றிவரும் நம்பிக்கை” என்கிறார்.

ALSO READ: