சீனா நீதிமன்றம்  முகநூல்
உலகம்

சீனா: 1 கோடி பரிசுத்தொகைக்காக 2.3 லட்சம் கடனில் சிக்கிய இளைஞர்... இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!

சீனாவில் போட்டி ஒன்றில் கலந்துக்கொள்ள 2.3 லட்சல் செலவு செய்த நபர்.. ஆனால், இறுதியில் நடந்த ட்விஸ்ட்..!

ஜெனிட்டா ரோஸ்லின்

சீனாவைச் சேர்ந்த ஜாங் என்ற குடும்பப் பெயரைக் கொண்ட இளைஞர், Xian Mulin Culture Communication Company என்ற நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "self-discipline challenge" என்ற போட்டியில் பங்கு பெற விரும்பியுள்ளார்.

இந்த போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர் ஒரு தனி அறையில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் கண்காணிக்கப்படுவார். அப்போது, ஒரு சில கடுமையான டாஸ்க்களும் அந்த போட்டியாளருக்கு கொடுக்கப்படும்.

தினமும் காலை 6 மணிக்கு முன் ஒருமுறை மட்டுமே விளக்கை ஆன் மற்றும் ஆப் செய்ய வேண்டும். கேமராக்களை நகர்த்தாமல் மற்றும் மறைக்காமல் இருக்க வேண்டும். அவர்களின் முகம் எல்லா நேரங்களிலும் கேமராவில் தெரிவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் மீறி, ஒருவேளை கேமராவில் பங்கேற்பாளர்களின் முகம் மறைந்தாலும் 3 வினாடிகளுக்குள் மீண்டும் காண்பிக்கப்பட வேண்டும். அதோடு கூடுதல் விதிகளாக அறையில் இருக்கும் பங்கேற்பாளர்கள் பீர் மற்றும் இதர டிரிங்ஸ்களை குடிக்கக்கூடாது, அவற்றை மறைத்தும் வைக்க கூடாது.

இப்படி வெவ்வேறு நிலைகளை கடந்து விட்டால், வெவ்வேறு பரிசு தொகைகள் வழங்கப்படுகிறது. இதையெல்லாம் கேட்டு, 3 நாட்கள் வெற்றிகரமாக தங்கியிருந்தால் 6,800 யுவான் (79,000 ரூபாய்), 6 நாட்கள் தங்கி இருந்தால் 28,000 யுவான் (3,26,000 ரூபாய்) என்று தரப்படும். இறுதி நாட்கள் வரை தங்கியிருப்பவர்களுக்கு ரூ.1.1 கோடி ரூபாய் வரை கிடைக்கும்.

எனவே, இதில் பங்கேற்க ஆசைக்கொண்ட ஜாங் செப்டம்பர் மாதம் பதிவு செய்து அதற்கான நுழைக்கட்டணத்தையும் செலுத்தியுள்ளார். இதன்படி, முதல் முறை பங்கேற்றபோது ஜாங் 24 மணி நேரத்திற்குள் முகத்தை மூடியதாக கூறி வெளியேற்றப்பட்டார். பிறகு பதிவுக்கட்டணத்தை மீண்டும் செலுத்தி பங்கேற்ற ஜாங்... இதேப்போல மூன்று முறை போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இப்படி, கிட்டதட்ட ரூ.2.3 லட்சம் வரை இதற்காக ஜாங் செலவு செய்துள்ளார்.

தொடர்ந்து ஜாங் வெளியேற்றப்பட்டதை கவனித்த அவரது உறவினர்கள் இவர் ஏமாற்றப்படுவதாக தெரிவித்துள்ளனர். பின்னரே அதை உணர்ந்துள்ளார் அவர். இதையடுத்து, போட்டியை அறிவித்த நிறுவனத்தின் மீது நிதிமன்றத்தில் ஜாங் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், விசாரணை தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

போட்டியில் பங்கேற்க கடன் சுமையை சந்தித்து இறுதியில் இளைஞர் ஏமாற்றப்பட்டிருக்கும் இந்த சம்பவம் ஜாங் குடும்பத்தினர் மட்டுமில்லை அப்பகுதி மக்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.