JD vance & Trump  web
உலகம்

ஈரான் அமெரிக்க போர் | ”ட்ரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார்.?” - ஜே.டி. வான்ஸ் கவலை!

ஈரான் மோதல் குறித்தான துல்லியமான தகவல்களை ட்ரம்ப் பெறுகிறாரா என்பது குறித்து அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கவலை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Premkumar S

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ஈரான் மீது கூட்டுத்தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு கடுமையான பதிலடிகளை கொடுக்கப்போவதாக தெரிவித்த ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவத் தளவாடங்களை தாக்கி வந்தது. இந்த சூழலில் தான், மத்தியக் கிழக்கில் போர் மூண்டது. தொடர்ந்து, உலகின் 20 சதவீத எரிவாயு வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிய நிலையில், உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்கா - ஈரான் போர்

இந்தப் போரின் காரணமாக, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் கடுமையான இழப்புகளை சந்தித்து வந்த நிலையில் தான், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக இந்தப் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, எங்களுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு ஈரான் விரைவில் வரவேண்டும் எனவும் இல்லையெனில் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். எனினும், ஹார்முஸில் இருக்கும் அமெரிக்க முற்றுகையை நீக்க வேண்டும், அணு ஆயுதத்தை விட்டுகொடுக்க முடியாது என்பதில் ஈரான் உறுதியாக இருந்து வருகிறது.

இந்தசூழலில் தான், 'தி அட்லாண்டிக்' இதழின் அறிக்கை ஒன்றில், பென்டகனிடமிருந்து ஈரான் மோதல் குறித்தான சரியான தகவல்களைப் ட்ரம்ப் பெறுகிறாரா? என தனிப்பட்ட முறையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கவலை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டு படை தலைவர் டான் கெய்ன் ஆகியோர், ஆயுத கையிருப்பு போதுமானதாக இருப்பதாகவும், ஈரான் படைகள் வலுவிழந்து இருப்பதாகவும் கூறுவரும் வேளையில், இவர்களை குற்றம் சாட்டு வகையில் இல்லாமல், ராஜதந்திர ரீதியிலேயே ’ட்ரம்பிடம் துல்லியமான தகவல்கள்‘ ஜே.டி.வான்ஸ் எழுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜேடி வான்ஸ்

மேலும், முக்கிய ஏவுகணை அமைப்புகளின் இருப்பு குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளதாகவும், கையிருப்பு குறைக்கப்பட்டால், சீனா, வட கொரியா அல்லது ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்கா அளிக்கும் பதிலடி பாதிக்கப்படலாம் என்று அவர் அஞ்சுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.