model image x page
உலகம்

இந்தியாவைவிட 16 மில்லியன் மடங்கு.. வேகமான இணைய சேவையை பெற்ற ஜப்பான்!

இந்தியாவின் சராசரி இணைய வேகத்தை விட 16 மில்லியன் மடங்கு வேகமான இணைய சேவையை உருவாக்கி ஜப்பான் சாதனை படைத்துள்ளது.

PT WEB

இந்தியாவின் சராசரி இணைய வேகத்தை விட 16 மில்லியன் மடங்கு வேகமான இணைய சேவையை உருவாக்கி ஜப்பான் சாதனை படைத்துள்ளது. ஜப்பானிய ஆராச்சியாளர்கள் விநாடிக்கு 1 புள்ளி 02 பெட்டாபிட்கள் என்ற புதிய இணைய சேவையை அடைந்துள்ளனர். ஜப்பானின் தேசிய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சுமிடோமோ எலக்ட்ரிக் மற்றும் ஐரோப்பிய கூட்டாளர்களுடன் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது அமெரிக்காவின் சராசரி இணைய சேவையை விட 3.5 மில்லியன் மடங்கு அதிகமானது என்றும், இந்தியாவின் சராசரி இணைய வேகமான 63.55 mbps-ஐ விட 16 மில்லியன் மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

model image

இந்த இணைய வேக சேவையை அடைய அவர்கள் ஆயிரத்து 800 கிலோ மீட்டருக்கும் அதிகமான 19-கோர் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிளை பயன்படுத்தி உள்ளனர். இது, சராசரியாக லண்டனில் இருந்து ரோம் வரையிலான தூரத்துக்கு சமம். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ள இந்த இணைய சேவை மூலம் ஒட்டுமொத்த நெட்பிளிக்ஸ் வீடியோக்களையும் ஒரு விநாடியில் பதிவிறக்கம் செய்யலாம். 150ஜிபி உள்ள வார்சோன் போன்ற வீடியோ கேம்களை கண் இமைக்கும் நேரத்தில் பதிவிறக்கம் செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.