Italy village
Italy village pt desk
உலகம்

கிராமங்களை நோக்கிச் செல்ல மக்களை அறிவுறுத்தும் இத்தாலி அரசு – ஏன் தெரியுமா?

webteam

கலப்ரியா பகுதியில் உள்ள கிராமங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கிராமங்களில் சிறுதொழில்கள், கடைகள் கைவிடப்பட்டு கிராமப் பொருளாதாரம் சரிந்து வருகிறது. இதை சமாளிக்க கலப்ரியா நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, நகரங்களில் இருந்து குடிபெயர்ந்து கிராமத்தில் வசிக்க வருவோருக்கு 28 ஆயிரம் பவுண்டு, அதாவது இந்திய கரன்சியில் 25 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Italy

அதேநேரம், “விண்ணப்பதாரர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். கிராமத்தில் கைவிடப்பட்ட கடைகள், சிறு தொழில்களை ஏற்று நடத்தவோ அல்லது புதிதாக தொழில் தொடங்கவோ முன்வர வேண்டும்” என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் கிராமத்தில் குடியேற வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டிலும் நகரங்கள் விழிபிதுங்கும் நிலையில், இதுபோன்ற ஒரு தொகையை அளிக்க அரசு முன்வந்தால், கிராமத்திற்கு நடையை கட்டி விடலாம் என பலர் நினைக்கக்கூடும். அதில் நீங்களும் ஒருவராகக் கூட இருக்கலாம்.