
என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டிருக்கும் அண்ணாமலை புதுக்கோட்டை அருகே இலுப்பூருக்கு வந்திருந்தார். அங்கு பேசிய அவர், “தமிழகத்தில் 4 மாவட்டங்கள் மட்டுமே வளர்ச்சி பெற்றிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் பின் தங்கியே உள்ளது” என விமர்சித்தார்.
“70 ஆண்டுகால அரசியலை புரட்டிபோட்டு விட்டு, கிராமப்புற வளர்ச்சியை முன்னெடுக்கும் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். திராவிடத்தால் வீழ்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள கிராம மக்கள்தான். மீண்டும் அவர்கள் வளர வேண்டும் எனில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்” என்றும் அண்ணாமலை பேசினார்.