இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசுமுறைப் பயணமாக வாஷிங்டன் செல்லும் அவர், அங்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, அதிபர் தேர்தலுக்கு முன்பு, அமெரிக்காவுக்கு சென்றிருந்த நெதன்யாகு, டொனால்டு ட்ரம்பை சந்தித்திருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் அதிபரான பிறகு இந்த சந்திப்பு நடைபெறுகிறது.