ஈரானுக்காக களமிறங்கிய IRGC படை web
உலகம்

'இனி அதி தீவிர தாக்குதல் தான்..' ஈரானுக்காக களமிறங்கிய IRGC படை.. பதறும் அமெரிக்கா-இஸ்ரேல் ராணுவம்?

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சேர்ந்து கூட்டுத்தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகம், எண்ணெய் ஆலைகள் என பல்வேறு இடங்களில் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது..

விமல் ராஜ்

ஈரானின் சக்தி வாய்ந்த ஐஆர்ஜிசி படையின் புதிய தலைவராக பிரிகேடியர் அகமது வஹிதி நியமிக்கப்பட்டுள்ளார். இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஆர்ஜிசி அமைப்பு, அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி, ஈரானின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

ஈரானின் சக்தி வாய்ந்த அமைப்பான ஐஆர்ஜிசி என அழைக்கப்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் புதிய தளபதியாக மூத்த அதிகாரியான பிரிகேடியர் அகமது வஹிதி நியமிக்கப்பட்டுள்ளார்.. இவரது நியமனம் அமெரிக்காவுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

ஈரான் புதிய தலைவர்

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அலி காமேனி உயிரிழந்தார். அவர் பலியானதைத் தொடர்ந்து ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவ அமைப்பான ஐ.ஆர்.ஜி.சி அமைப்பு களமிறங்கியுள்ளது..

ஐ.ஆர்.ஜி.சி படை என்றால் என்ன..?

ஈரானின் தனி ராணுவ அமைப்பாக திகழும் ஐஆர்ஜிசி உள்நாட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தூணாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், டிரோன்கள், போன்ற அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த ஆயுதங்களை பயன்படுத்தும் அமைப்பாகவும் ஐஆர்ஜிசி திகழ்ந்து வருகிறது. இந்த அமைப்பு ஈரான் அரசுக்கு கட்டுப்படாது. ஈரானின் உட்சபட்ச தலைவர் அலி காமினியின் உத்தரவுக்கு மட்டுமே கட்டுப்படும். இரண்டு லட்சம் வீரர்கள் இந்த அமைப்பில் உள்ளனர்.

அதே சமயம், ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்பு, ஹவுதி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்து வருவது மட்டுமின்றி அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருவதாக கூறப்படுகிறது..

இதன் காரணமாகவே இந்த அமைப்பை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன் ஐஆர்ஜிசி அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

அமெரிக்க ரானுவ தளங்களை குறிவைத்து தாக்கும் ஈரான்

இந்த நிலையில் அமெரிக்கா-இஸ்ரேல் ராணுவம் நடத்திய கூட்டு தாக்குதலில் ஐஆர்ஜிசி அமைப்பின் தலைவராக இருந்த முகமது பாக்பூர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார்..

இவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஐஆர்ஜிசி அமைப்பின் புதிய தலைவராக பிரிகேடியர் அகமது வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது நியமனம் அமெரிக்காவுக்கு மீண்டும் தலைவலியாக மாறியுள்ளது.

ஐஆர்ஜிசி அமைப்பின் புதிய தலைவர் அகமது வஹிதி

ஈரானின் உள்துறை அமைச்சராக இருந்து வந்த பிரிகேடியர் கடந்த டிசம்பர் மாதம் ஐஆர்ஜிசி அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தங்கள் நாட்டிற்குள் பிரிகேடியர் நுழைய அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடை விதித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.