ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.
குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான் தனது அண்டை நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியது. இதன்காரணமாக வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், தங்கள் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வளைகுடா நாடுகள் கூறி வருகின்றன.
இந்த சூழலில் தான், ஈரானால் தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவிக்கும் காணொளி ஈரான் அரசு தொலைக்காட்சி ஒன்றில் நேற்று வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் அதிபர் பெஷேஷ்கியன் பேசும்போது, இனி அண்டை நாடுகளை தாக்கக்கூடாது என இடைக்கால தலைமைக் கவுன்சிலில் முடிவெடுத்துள்ளோம். ஆனால், அந்த நாடுகளில் இருந்து அமெரிக்க எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் பதிலடி கொடுப்போம். இந்த விவகாரத்தை நாம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும் என நினைக்கிறேண் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஈரான் சரணடைய வேண்டும் என்ற ஈரான் கனவு என்றும் நிறைவேறாது எனவும் தெரிவித்துள்ளார்.