ஈரான் 'ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்' என்ற பெயரில் மத்திய கிழக்கில் 8 நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கியுள்ளது. இஸ்ரேல், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை ஈரான் அழித்துள்ளது.
செய்தியாளர் - விமல்
ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்' {'Fatah-e-Jang } என்ற பெயரில் மத்திய கிழக்கில் உள்ள 8 நாடுகள் மீது ஈரான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. முதலில் இஸ்ரேலை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பின்னர் சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களையும் ஈரான் தாக்கியுள்ளது..
இந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் அழித்ததாகக் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பேரழிவு தருவோம் என ஈரான் சூளுரைந்திருந்தது.
இந்த நிலையில் தான், இஸ்ரேல் தவிர அனைத்து நாடுகளிலும் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை ஈரான் அதிரடியாக தாக்கியுள்ளது.
அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் 8 நாடுகளை ஈரான் தாக்கியுள்ளது.. கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதே போல ஜோர்டானில் உள்ள அமெரிக்க தலைமையகத்தை ஈரான் தாக்கியுள்ளது. ஜோர்டான் இஸ்ரேலின் அண்டை நாடாகும், அமெரிக்கா தனது சக்திவாய்ந்த F-22 போர் விமானங்களை நிறுத்தி வைத்திருந்தது...
அதுமட்டுமின்றி, குவைத்தில் உள்ள அமெரிக்க தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதே போல, பஹ்ரைனில் உள்ள ஒரு அமெரிக்க தளத்தை குறி வைத்து அதிரடி தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. அங்குள்ள ராணுவ தளத்தில் அமெரிக்கா தனது F-12 ரக விமானங்களை நிறுத்தியிருந்தது, அதனை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது...
அபுதாபியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தையும் ஈரான் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, முழு ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது..
அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான தூரம் 11,700 km என்பதால் அமெரிக்கா மீது ஈரானால் நேரடி தாக்குதல் நடத்த நடத்தமுடியாது என்பதால் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..