American Soldiers  file photo
உலகம்

தரையில் வைத்தே அசுர தாக்குதல்? 10 லட்சம் வீரர்களை இறக்கிய ஈரான்.. பின்வாங்கும் அமெரிக்க வீரர்கள்?

அமெரிக்க வீரர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் 10 லட்சம் வீரர்களை களமிறக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

விமல் ராஜ்

ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதல் நடத்த திட்டமிட்டது மட்டுமின்றி 10 ஆயிரம் வீரர்களை களமிறக்கியுள்ளது. எந்த நேரத்திலும் தரைவழித் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், ஈரான் எடுத்த அதிரடி முடிவுதான் அமெரிக்காவை மீண்டும் அதிர வைத்துள்ளது.

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள சூழலில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்றும் அதனால், 10 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தப்போவதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.

iran war

ஆனால், ஈரான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என திட்டவட்டமாக மறுத்தது. இதனையடுத்து, ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா, தரைவழித் தாக்குதலை தொடங்க கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவை ஈரான் நடுங்க வைத்துள்ளது. அமெரிக்க வீரர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் 10 லட்சம் வீரர்களை களமிறக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய கிழக்குப் போரின் அடுத்தகட்டமாக, ஈரானின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா தரைவழித் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதை எதிர்கொள்ள, 10 லட்சத்திற்கும் அதிகமான படையினரை ஈரான் களம் இறக்கி வருவதாக அந்த நாட்டின் 'டான்சிம்' (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் புதியதாக ராணுவத்தில் சேர்க்கவும் ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது.