ஜார்ஜியா முகநூல்
உலகம்

ஜார்ஜியாவில் விஷவாயு கசிவு; உயிரிழந்த 11 இந்தியர்கள்!

குடாவிரி பகுதியில் உள்ள பனி பிரதேசத்தில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் கார்பன் மோனோ ஆக்சைடு வாயு கசிந்து விபத்து நிகழ்ந்துள்ளது

PT WEB

ஜார்ஜியாவில் உணவகத்தில் விஷவாயு கசிந்த விபத்தில் சிக்கி 11 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

குடாவிரி பகுதியில் உள்ள பனி பிரதேசத்தில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் கார்பன் மோனோ ஆக்சைடு வாயு கசிந்து விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் சிக்கி உணவகத்தில் பணியாற்றி வந்த 11 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக பிலிசியில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா எடுத்துவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போதிய உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளது.