donald trump, h1b visa x page
உலகம்

H-1B விசா கட்டணத்தை உயர்த்த திட்டம்.. இந்தியர்களுக்கு கூடுதலாக ரூ.99 லட்சம் செலவு!

எச்-1பி விசாவைப் பெறுபவர்களில் 70%க்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பதால், கூடுதலாக ரூ.99 லட்சம் செலவு ஏற்படுத்தும் ஒரு திட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் கையிலெடுத்துள்ளது அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Rishan Vengai

எச்-1பி விசா கட்டண உயர்வு திட்டம் இந்திய ஐடி துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசா பெறுபவர்களில் 70%க்கும் மேல் இந்தியர்கள் என்பதால், 99 லட்சம் ரூபாய் வரை உயரக்கூடிய இந்த கட்டணம் நிறுவனங்களின் செலவினை கடுமையாக அதிகரிக்கும்.

அமெரிக்காவில் உயர் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான புதிய எச்-1பி (H-1B) விசா விண்ணப்பக் கட்டணத்தை 1 லட்சம் டாலருக்கு மேல் உயர்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும், வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்துவதைக் கட்டுப்படுத்தவும் இக்கட்டண உயர்வு முன்மொழியப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 99 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும் இந்தக் கட்டண முறை புதிய விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்கும் புதுப்பித்தல்களுக்கும் பொருந்தாது என்றும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

h1 b visa

எச்-1பி விசாவைப் பெறுபவர்களில் 70%க்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பதால், இந்தத் திடீர் அறிவிப்பு இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் ஐடி நிறுவனங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தஆண்டு அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட இதேபோன்ற அறிவிப்புக்கு அமெரிக்க நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.