அமெரிக்கா, இந்தியா x page
உலகம்

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்.. விரைவில் கையெழுத்து!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

இந்தியா, அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய கடந்த சில வாரங்களாக இரு தரப்புக்கும் தீவிர பேச்சுவார்ததைகள் நடைபெற்றன. அமெரிக்காவின் விளைபொருட்கள், பால் பொருட்களை விற்கும் வகையில் இந்தியா தனது சந்தையை திறந்துவிட வேண்டுமென அமெரிக்க குழு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தங்கள் நாட்டின் அரிசி, கோதுமை, மக்காச்சோளம் போன்ற விளைபொருட்களுக்கும் பால் பொருட்களுக்கும் இந்தியா இறக்குமதி வரியை குறைக்க அமெரிக்க தரப்பு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆனால் இதனால் உள்நாட்டில் கோடிக்கணக்கான விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுவர் எனக்கூறி இந்தியா இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த பேச்சுவார்த்தையிலும் இது தேக்க நிலையை ஏற்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் எதுபோன்ற அம்சங்கள் இருக்கும்... இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா பாதகமாகிவிடுமா என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தங்கள் பொருட்களுக்கு இந்தியா வரியை குறைக்காவிட்டால் இந்தியாவின் அனைத்து பொருட்களுக்கும் 26% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார்.