Map Reuters
உலகம்

ஆசியாவின் சக்திமிக்க நாடுகள் பட்டியல்.. இந்தியாவின் இடம் என்ன தெரியுமா?

பொருளாதாரம், ராணுவ பலம், செல்வாக்கு உட்பட 131 விதமான பிரிவுகளின் கீழ் 27 ஆசிய நாடுகளுக்கு தரவரிசை வழங்கப்பட்டது.

PT WEB

ஆசியாவின் 3ஆவது வலிமை வாய்ந்த நாடாக இந்தியா திகழ்வதாக லோவி இன்ஸ்டிட்யூட் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசியாவிலும் அமெரிக்கா தனது செல்வாக்கை கொண்டிருக்கும் நிலையில் அதுவும் ஆய்வில் இடம்பெற்றுள்ளது. அதன்படி 78.9 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்தையும் 73.6 புள்ளிகளுடன் சீனா 2ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா 40.5 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. வலிமையை குறிக்கும் புள்ளிகளில் அமெரிக்காவை சீனா இந்தாண்டு மிகவும் நெருங்கியுள்ளதாக லோவி ஆய்வறிக்கை கூறியுள்ளது. அதே நேரம் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இடைவெளியும் சற்றே குறைந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

lowy institute

வலிமையில் அமெரிக்கா முதலிடத்தில் நீடித்தாலும் அதன் செல்வாக்கு முந்தைய ஆண்டுகளை விட தற்போது குறைந்துள்ளதாக லோவி ஆய்வறிக்கை கூறுகிறது. பிராந்திய அளவில் சக்திவாய்ந்த தலைவர்களில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு அடுத்த இடத்தை இந்திய பிரதமர் மோடி பெற்றிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. பொருளாதாரம், ராணுவ பலம், செல்வாக்கு உட்பட 131 விதமான பிரிவுகளின் கீழ் 27 ஆசிய நாடுகளுக்கு தரவரிசை வழங்கப்பட்டது.