three prominent right-wing leaders have faced a downfall Reuters
உலகம்

போல்சனேரோ, நெதன்யாகு, ட்ரம்ப்.. 1 வாரத்தில் 3 மாபெரும் தோல்விகள்.. வீழ்ந்த வலதுசாரி தலைவர்கள்!

ஒரே வாரத்தில் உலகின் பிரபலம் வாய்ந்த 3 வலதுசாரி தலைவர்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். அதுகுறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Praveen Joshva L

பிரேசில் அதிபர் தேர்தல் கடந்த அக்டோபர் 4-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரும் இடதுசாரி வேட்பாளருமான லூலா டா சில்வாவும் ( Lula da Silva) முன்னாள் அதிபர் ஜேர் போல்சரேரோவின் (Jair Bolsonaro) மகனும் தீவிர வலதுசாரியுமான பிளாவியோ போல்சனேரோவும் (Flávio Bolsonaro) போட்டியிட்டனர்.

Flávio Bolsonaro

முதற்கட்ட தேர்தலில் போல்சனேரோ, லூலா டா சில்வாவைவிட முன்னிலை பெற்றார். எனினும் வெற்றிக்கு தேவையான 50% வாக்குகளை யாரும் பெறாததால் மறுதேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது சுற்று அதிபர் தேர்தலில் லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) வெற்றிபெற்று அதிபராகப் பொறுப்பேற்றார்.

தீவிர வலதுசாரியான பிளாவியோ போல்சனேரோவின் தோல்வி உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இவரின் தந்தை ஜேர் போல்சனேரோ அதிபராக இருந்தபோது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், பொதுமக்களுக்கு அரசு வழங்கிய பல்வேறு நலத்திட்டங்களை ரத்து செய்து தாராளமயமாக்களை ஊக்குவித்தார். அமேசான் மழைக்காடுகளை அழித்து அந்த நிலத்தில் பெரு நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி வழங்கினார். இதன் காரணமாக அதே கொள்கையை கொண்ட அவரின் மகன் தோல்வியை உலகளாவிய சுற்றுசூழல் ஆர்வலர்கள் வரவேற்றனர்.

benjamin netanyahu

அதே போல இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று பெரும்பான்மை பெற தவறியது. கடந்த தேர்தலில் 64 இடங்களில் வென்ற இந்த கூட்டணி தற்போதைய தேர்தலில் பின்னடைவை சந்தித்தது உலகளவில் முக்கிய செய்தியாக இடம்பெற்றது. இடதுசாரிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில், 19 இடங்களில் வென்றுள்ள அரபு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இது இஸ்ரேலிய வலதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக இருந்து காஸாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், அதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இரு முக்கிய வலதுசாரித் தலைவர்களின் வீழ்ந்த அதிர்ச்சி முடிவதற்குள், மற்றொரு வலதுசாரியான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றி அதிரவைத்துள்ளது.

Trump

இதன் மூலம் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய சூழல் ட்ரம்ப்புக்கு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் உலகின் பிரபலமான மூன்று முக்கிய வலதுசாரிகளையும் மக்கள் நிராகரித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.