உலகம்

ஹோண்டுராஸ் நாடாளுமன்றத்தில் எம்.பி.களுக்குள் அடிதடி

ஹோண்டுராஸ் நாடாளுமன்றத்தில் எம்.பி.களுக்குள் அடிதடி

JustinDurai

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டது.

ஹோண்டுராசில் தாராளவாத கட்சியை சேர்ந்த சியோமாரா கேஸ்ட்ரோ அடுத்த வாரம் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெற்றது, இதில் லூயிஸ் ரெடோன்டோ என்பவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜார்ஜ் காலிக்ஸ் என்பவர் வெற்றி பெற்றார். 20 பேர் கடைசி நேரத்தில் எதிர்த்தரப்புக்கு வாக்களித்ததால் இந்நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் ரொடோன்டோவின் ஆதரவு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளேயே வைத்து காலிக்சின் ஆதரவாளர்களை கடுமையாக தாக்கினர். துரோகிகள், சதிகாரர்கள் என அவர்கள் கூச்சலும் இட்டனர். எனினும் சிறிது நேரத்தில் சபை காவலர்கள் வந்து நிலைமையை சரி செய்தனர்.