புதின், ஜெலன்ஸ்கி எக்ஸ் தளம்
உலகம்

ரஷ்யாவுக்கு எதிரானப் போர்.. உக்ரைனுக்கு உதவி செய்த நாடுகளும் நிதி விவரமும்!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உக்ரைனுக்கு உதவி வழங்குவதில் ஐரோப்பா முதலிடத்தில் உள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஜி.எஸ்.பாலமுருகன்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முக்கியமான தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கான உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்தி அமெரிக்கா அதிரடி காட்டியது.

போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனாலும் டிரம்பின் இந்த செயல் போரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2024 வரை உக்ரைனுக்கு வழங்கிய உதவிகளை விரிவாகப் பார்க்கலாம்.

புதின், ஜெலன்ஸ்கி

நிதி, மனிதாபிமானம், ராணுவம் ஆகியவற்றில் உக்ரனைக்கு அமெரிக்கா அதிக உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ராணுவத்தில் 64.1 பில்லியன் யூரோக்களை வழங்கியிருக்கிறது.

இதற்கு அடுத்தப்படியாக ஐரோப்பிய யூனியன் நிதி உதவியாக 46.4 பில்லியன் யூரோக்களையும், மனிதாபிமான உதவியாக 2.6 பில்லியன் யூரோக்களையும் வழங்கியிருக்கிறது. ஆனால் ராணுவ உதவி எதுவும் வழங்கவில்லை.

இதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், கனடா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன், பிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு அதிக உதவிகளை புரிந்துள்ளன. உக்ரைனுக்கு கிடைத்திருக்கும் 267 பில்லியன் யூரோ உதவி வழங்கியவர்களில், ஐரோப்பா மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. மொத்தம் 132 பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது. அமெரிக்கா 114 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. உக்ரைனுக்கு ராணுவ உதவி என்று பார்த்தால் 129.8 பில்லியன் யூரோக்கள் கிடைத்துள்ளன.

russia-ukraine war

இதில் அமெரிக்கா 64 பில்லியன் யூரோக்களுடன் முதலிடத்திலும், ஐரோப்பா 62 பில்லியன் யூரோக்களுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. போரின் காரணமாக உக்ரைன் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி ஐரோப்பா முழுவதும் சுமார் 63 லட்சம் உக்ரேனிய அகதிகளும், உலகளவில் 68 லட்சம் உக்ரேனிய அகதிகளும் பிறநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஜெர்மனி, ரஷ்யா, போலந்து, பிரிட்டன், ஸ்பெயின் நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

உக்ரைனுக்கான உதவி: அமெரிக்கா vs டாப் 10 நாடுகள்

நாடு - நிதி(பில்லியன் யூரோ) - மனிதாபிமானம் - ராணுவம்

அமெரிக்கா: 46.6 - 3.4 - 64.1

ஐரோப்பிய யூனியன்: 46.4 - 2.6

ஜெர்மனி: 1.4 -3.2 -12.6

பிரிட்டன்: 3.8 - 0.9 - 10.1

ஜப்பான்: 9.2 - 1.3 - 0.1

கனடா: 5.2 - 0.5 - 2.6

டென்மார்க்: 0.1 - 0.4 - 7.5

நெதர்லாந்து: 0.7 - 0.8 - 5.9

ஸ்வீடன்: 0.3 - 0.4 - 4.7

பிரான்ஸ்: 0.8 - 0.6 - 3.5

போலந்து: 0.9 - 0.5 - 3.6

ரஷ்யா - உக்ரைன் போர்

நாடுகள் - உக்ரைன் அகதிகள்

ஜெர்மனி: 12.4 லட்சம்

ரஷ்யா: 10.22 லட்சம்

போலந்து: 10 லட்சம்

பிரிட்டன்: 2,53,535

ஸ்பெயின்: 2,16,975