மொராக்கோவில் கடந்த சில வாரங்களாகக் கனமழை மழை web
உலகம்

மொராக்கோ| கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளப்பெருக்கால் மூழ்கிய கிராமங்கள்!

மொராக்கோவில் கடந்த சில வாரங்களாகக் கனமழை மழை பெய்துவரும் நிலையில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

PT WEB

மொராக்கோவில் கனமழையால் வடமேற்கு பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. க்சார் எல்-கெபிர் நகரில் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சிடி ஸ்லிமானே மாகாணத்தின் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மொராக்கோவில் கடந்த சில வாரங்களாகப் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, க்சார் (Ksar) எல்-கெபிர் (el-Kebir) நகரில் மட்டும் சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மொராக்கோவில் கடந்த சில வாரங்களாகக் கனமழை மழை

சிடி (Sidi) ஸ்லிமானே (Slimane) மாகாணத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.