அமெரிக்காவில் குளிரை தாங்கமுடியாமல் உறைந்துபோய் கீழே விழும் இகுவானாக்காள்
அமெரிக்காவில் குளிரை தாங்கமுடியாமல் உறைந்துபோய் கீழே விழும் இகுவானாக்காள்web

அமெரிக்கா | கடும் குளிரை தாங்காமல் உறைந்துபோய் கீழே விழும் ஓணான்கள்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கடும் குளிரை தாங்கமுடியாமல் ஊர்வன வகை இகுவானாக்கள் உறைந்துபோய் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
Published on
Summary

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் கடும் குளிர் காரணமாக, இகுவானா ஓணான்கள் மரங்களில் இருந்து உறைந்து கீழே விழுகின்றன. இந்த தற்காலிக மயக்க நிலையை பயன்படுத்தி, புரோவார்டு கவுன்ட்டியில் 1,500 ஓணான்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக, அங்கிருக்கும் இகுவானா (Iguana) வகை ஓணான்கள் மரங்களில் இருந்து உறைந்த நிலையில் கீழே விழுகின்றன.

குளிர் காலத்தில் ஊர்வன விலங்குகள் தங்களது தசைக் கட்டுப்பாட்டை இழந்து, ஒருவித தற்காலிக மயக்க நிலைக்குச் செல்வதே இதற்குக் காரணம். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, புரோவார்டு (Broward) கவுன்ட்டியில் (county) மட்டும் சுமார் 1,500 ஓணான்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இகுவானா (Iguana) வகை ஓணான்கள்
இகுவானா (Iguana) வகை ஓணான்கள்

இவைஆக்கிரமிப்பு இனத்தைச் சேர்ந்தவை என்பதால், கடும் குளிரைத் தாங்கும் திறன் அவற்றுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com