உலகெங்கும் அதிகளவில் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகள் மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஆதாரத்துடன் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
டென்மார்க் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் புகழ்பெற்ற பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. கருத்தடை மருந்துகளை மிக கவனத்துடன் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாத்திரைகள், உடலுக்குள் பொருத்திக்கொள்ளும் பொருட்கள், ஊசிகள் உள்ளிட்ட கருத்தடை நடைமுறைகளை அடிக்கடி பயன்படுத்துவதால் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என ஏற்கனவே அச்சங்கள் இருந்தாலும் அது தற்போது ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 1996 முதல் 2021ஆம் ஆண்டு வரை கருத்தடை நடைமுறைகளை பயன்படுத்திய 20 லட்சம் பெண்களின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.