new year 2026 x page
உலகம்

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு.. எங்கு, எப்போது தெரியுமா?

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு எது... கடைசியாக பிறக்கும் நாடு எது... இந்திய நேரப்படி எந்தெந்த முக்கிய நகரங்களில் எப்போது புத்தாண்டு பிறக்கிறது என்பது குறித்த விவரங்களை வரைகலை வடிவில் தற்போது பார்க்கலாம்.

PT WEB

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு எது... கடைசியாக பிறக்கும் நாடு எது... இந்திய நேரப்படி எந்தெந்த முக்கிய நகரங்களில் எப்போது புத்தாண்டு பிறக்கிறது என்பது குறித்த விவரங்களை வரைகலை வடிவில் தற்போது பார்க்கலாம்.

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு எது... கடைசியாக பிறக்கும் நாடு எது... இந்திய நேரப்படி எந்தெந்த முக்கிய நகரங்களில் எப்போது புத்தாண்டு பிறக்கிறது என்பது குறித்த விவரங்களை வரைகலை வடிவில் தற்போது பார்க்கலாம். உலகின் கிழக்குக் கோடியில் பசிபிக் கடலில் உள்ள சின்னஞ்சிறு தீவான கிரிபாதிதான் (KIRIBATI) புத்தாண்டு முதலில் பிறக்கும் இடம். இந்திய நேரப்படி இங்கு 31ஆம் தேதி மாலை 3.30க்கு புத்தாண்டு பிறக்கிறது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் மாலை 6.30 மணிக்கும் ஜப்பானின் டோக்கியோவில் இரவு 8.30 மணிக்கும் புத்தாண்டு பிறக்கிறது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் இரவு 9.30 மணிக்கு புத்தாண்டு உதயமாகிறது. துபாயில் நள்ளிரவு 1.30 மணிக்கும் புத்தாண்டு பிறக்கிறது.

new year 2026

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நள்ளிரவு 2.30 மணிக்கும் பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒன்றாம் தேதி அதிகாலை 5.30 மணிக்கும் புத்தாண்டு உதயமாகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒன்றாம் தேதி காலை 10.30 மணிக்கும் லாஸ் ஏஞ்சலிஸில் பிற்பகல் ஒன்றரை மணிக்கும் புத்தாண்டு பிறக்கிறது. பூமிப்பந்தின் மேற்குக் கோடியில் உள்ள பேக்கர் (BAKER) தீவில் இந்திய நேரப்படி ஒன்றாம் தேதி மாலை 5.30க்கு புத்தாண்டு பிறக்கிறது. இதுதான் கடைசியாக புத்தாண்டு பிறக்கும் இடமாகும். உலகின் கிழக்குக் கோடியில் புத்தாண்டு பிறந்து 26 மணி நேரம் கழித்துதான் மேற்கு கோடியில் புத்தாண்டு பிறக்கிறது என்பது சுவாரசிய தகவல்.