வேலைவாய்ப்பு புதிய தலைமுறை
உலகம்

2025 | உலகளவில் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இருக்கிறது? ஆய்வு சொல்வது என்ன?

30% இந்திய நிறுவனங்கள் பட்டப்படிப்புக்கு முக்கியத்துவம் தராமல் தொழிற்திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலையில் சேர்க்க முனைப்பு காட்டுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

PT WEB

2025ஆம் ஆண்டில் உலகளவில் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இருக்கும் என்பது குறித்த வருடாந்திர அறிக்கையை உலக பொருளாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 30% இந்திய நிறுவனங்கள் பட்டப்படிப்புக்கு முக்கியத்துவம் தராமல் தொழிற்திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலையில் சேர்க்க முனைப்பு காட்டுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாதிரிப் படம்

பிற நாடுகளைவிட இந்திய நிறுவனங்கள்தான் தொழிற்திறன் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்திய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், எரிசக்தி தொழில்நுட்பங்களில் அதிகளவு முதலீடு செய்வதாகவும் எனவே அவற்றில் வேலைவாய்ப்புகள் மிகுதியாகவும் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சந்தையில் தொழிற்திறன் மிக்கவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. தொழிற்திறன் மிக்கவர்களுக்கு ஐரோப்பாவில் பணிவாய்ப்புகள் அதிகம் இருப்பதை இத்தகவல் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது. பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க்கும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தனக்கு வேண்டாம் என்றும் தொழிற்திறன் மிகுந்தவர்களே தனது நிறுவனங்களுக்கு தேவைப்படுவதாகவும் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது வேலைவாய்ப்பு சந்தையிலும் பலிக்கத் தொடங்கியுள்ளது.