world economy file photo
உலகம்

உலக நாடுகளின் பொருளாதாரம்: வளர்ச்சி வேகத்தில் பின்தங்கும் வளர்ந்த நாடுகள்!

வரும் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதம் எப்படி இருக்கும் என்ற கணிப்பை பன்னாட்டு நிதியமான ஐஎம்எஃப் வெளியிட்டுள்ளது.

PT WEB

உலகளவில் சராசரி வளர்ச்சி 3.4% ஆக இருக்கும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது. கனடா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் 1.7% முதல் 0.7% வரை மட்டுமே வளர்ச்சி பெறும் என கூறப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவின் வளர்ச்சி வீதம் 7.9%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா குறித்த மதிப்பீடு 7%ஆக உள்ளது. சீனா 4% வளர்ச்சி காணும் என்று கணித்துள்ள ஐஎம்எஃப் அமெரிக்கா 2.3% வளர்ச்சி காணும் என கூறியுள்ளது.

Economy

வளர்ந்த நாடுகள் பட்டியலில் உள்ள கனடா 1.7%, பிரிட்டன் 1.2%, ஜெர்மனி 1.1%, பிரான்ஸ் 0.7%, ஜப்பான் 0.7% மட்டுமே வளர்ச்சியை பெற வாய்ப்புள்ளதாக கூறுகிறது ஐஎம்எஃப். பிரேசில் 1.9%, தென்னாப்பிரிக்கா 1.3%, ரஷ்யா 0.9% வளர்ச்சியை பெறும் என ஐஎம்எஃப் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக உலகளவில் சராசரி வளர்ச்சி 3.4%ஆக இருக்கும் எனவும் ஐஎம்எஃப் கூறியுள்ளது