காஸாவில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த குண்டுமழை நின்றிருக்கிறது. காஸாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு..
பறிபோன 67 ஆயிரம் உயிர்கள்...படுகாயமடைந்த ஒரு லட்சத்து 70ஆயிரம் பேர்...தரை மட்டமானபல்லாயிரக்கணக்கான வீடுகள்...காஸாவில் கடந்த 2 ஆண்டுகளாக நிகழ்ந்த கல்நெஞ்சையும் கரையவைக்கும் புள்ளிவிவரங்கள்தான் இவை.
எப்போது தலைக்கு மேலே குண்டு விழும்என நொடிக்கு நொடி அஞ்சி வாழவேண்டிய நிலை... இதற்கிடையேப சிக்கொடுமை வேறு... தட்டேந்தி உணவுக்காக அலைந்து திரிந்தார்கள் பாலஸ்தீன மக்கள். எங்கோ உணவுகிடைக்கிறது என தகவல் கிடைத்து அங்கு சென்றால் அங்கும் குறிவைத்துகுண்டு வீசி தாக்குதல் நடந்த கொடூரமும் நிகழ்ந்தது...
குண்டில் சிக்கி இறந்தகுழந்தைகள் தவிர பசிக்கொடுமையால் இறந்த குழந்தைகளும் ஏராளம். குழந்தையின் சடலத்தை கையில் ஏந்தி தாய்மார்கள் கதறிய அவலம் தினம்தினம் நடந்தேறியது. வீடுகளைவிட்டு அகதிகளை போல பெட்டி படுக்கைகளுடன் உயிருக்கு அஞ்சி ஓடும்கொடுமையும் நடந்தது. பூவுலகின் நரகம் எது என்று கேட்டால் துளியும் தயக்கம் இன்றி காஸா எனக் கூறும் வகையில் அங்கு நிலைமை இருந்தது.
இந்தசோகத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்திஉலகின் மூலை முடுக்கெங்கும்போராட்டங்கள் நடந்தன. இந்தசூழலில்தான் போர் முடிவுக்கு வந்துள்ளது. குண்டுவீச்சுகள் நின்றுள்ளன. மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடத் தொடங்கியுள்ளனர். உயிருக்குஅஞ்சி தெற்குப்பகுதிக்கு வந்தவர்கள் நகரத்தின் மைய பகுதிக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனாலும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை.
கட்டட இடிபாடுகள் மலைபோல் குவிந்துள்ளன. இவற்றைஅகற்றவே 10 ஆண்டுகளுக்கு மேல்ஆகும் என கூறப்படுகிறது. மின்சாரவசதி இல்லை... குடிநீர் வசதி இல்லை என எதுவுமே இல்லாத நிலைதான் உள்ளது. இருக்கிறது என சொல்வதற்கு உயிர்மட்டுமே உள்ளது. நகரத்தை கட்டியெழுப்ப பல ஆயிரம் கோடி ரூபாய்பணம் தேவை...அதை முன்னின்று நடத்த ஆட்சியாளர்கள் தேவை... இது போன்றநிலையில்தான் நம்பிக்கை ஒளியாய் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதுவாவது மகிழ்வான வாழ்க்கையை தருமா...ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் காஸா மக்கள்.