எலிசபெத் ராய்ட்டர்ஸ்
உலகம்

ஹார்வர்டு விவகாரம் | ட்ரம்ப் எடுத்த நடவடிக்கை.. பெர்சியாவின் வருங்கால ராணிக்கும் ஆபத்து!

ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவால் இளவரசி எலிசபெத் தனது படிப்பைத் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Prakash J

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசு நிர்வாகத்திற்கும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தொடர்ந்து வருகிறது. அரசின் உத்தரவுகளை ஏற்காததால் ட்ரம்ப் நிர்வாகம் ஹார்வர்டு பல்கலைக்கு நிதியுதவியையும் வரிச் சலுகையையும் ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக அப்பல்கலை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகம் வௌிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ட்ரம்பின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. ஆயினும், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை மூலமாகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எலிசபெத்

இந்த நிலையில், பெல்ஜியம் நாட்டின் இளவரசியும், வருங்கால ராணியுமான எலிசபெத் (வயது 23) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவால் இளவரசி எலிசபெத் தனது படிப்பைத் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெல்ஜிய அரச அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் லோர் வாண்டூர்ன், “இளவரசி எலிசபெத் தனது முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவின் தாக்கம், வரும் நாட்களில் தெளிவாகும். தற்போது நிலைமையை ஆராய்ந்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.