சிறுமி வரைபடம் PT
உலகம்

25 ஆண்டுகள்.. 256 சிறுமிகள்.. மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு.. கொடூர குழந்தை மருத்துவர்!

தன்னுடைய பணிக்காலத்தில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்துள்ள பிரான்ஸின் முன்னாள் அரசு மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Prakash J

மேற்கு பிரான்ஸைச் சேர்ந்தவர் ஜோயல் லு ஸ்கௌர்னெக் (74). அரசு மருத்துவரான இவர், தன்னுடைய பணிக்காலத்தில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதற்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர், மேற்கு பிரான்ஸ் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல டாக்டராகவும், தலைமை அறுவைசிகிச்சை நிபுணராகவும் பணியாற்றிவர். 1989 முதல் 2014 வரையான இந்தக் காலகட்டத்தில் அவரிடம் சிகிச்சைக்கு வந்த 15 வயதுக்குட்பட்ட 256 சிறுமிகள் உட்பட, மொத்தம் 300 பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

மாதிரிப் படம்

தன்னிடம் சிகிச்சைக்காக வந்த ஏராளமான சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், கட்டாயப்படுத்தியும் பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர்மீது புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோயல் லு ஸ்கௌர்னெக்-வை கடந்த 2010-ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். 15 ஆண்டுகளாக பாரீசில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். தற்போது விசாரணையின் முடிவில் அவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதில் அவர் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்திருப்பதால், மேலும் 5 ஆண்டுகள் அவர் சிறையில் கழிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட தரப்பில் வழக்காடிய 60 வழக்கறிஞர்களில் ஒருவரான தாமஸ் டெலாபி, “இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மிகவும் மோசமான குழந்தை பாலியல் குற்றவாளி ஜோயல் ஆவார். அவர், குழந்தை பாலியல் வன்முறையின் அணுகுண்டு. அவரை, பொதுமக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

sex harassment

முன்னதாக, ஜோயல் தனது இரண்டு மருமகள்கள் உட்பட நான்கு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 2020ஆம் ஆண்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். அதற்கு முன்பு, 2005ஆம் ஆண்டு குழந்தைகள் பாலியல் துஷ்பிரயேகம் தொடர்பான படங்களை பதிவிறக்கம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், 2017ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டாசின் சிறுமியை அவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக சந்தேகத்தின் பேரில் லு ஸ்கௌர்னெக் மீண்டும் கைது செய்யப்பட்ட பின்னரே, அவருடைய விவகாரம் வெளியுலகிற்கு தெரிய வந்தது.