அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. இதன்மூலம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் எலான் மஸ்க்கிற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மறுபுறம், பிற நாடுகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நிதியுதவியையும் அத்துறை ரத்து செய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 21 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.182 கோடி) நிதியுதவியை, அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (DOGE) ரத்து செய்துள்ளது. இதேபோல மொசாம்பிக், கம்போடியா, சொ்பியா, நேபாளம், வங்கதேசம், மால்டோவா உள்ளிட்ட நாடுகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நிதியுதவியையும் டிஓஜிஇ ரத்து செய்துள்ளது.
அமெரிக்க அரசு நிா்வாகத்தை மேம்படுத்தி, வீண் செலவுகள் குறைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு டிஓஜிஇ செயல்படும் நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி எந்தெந்த நாடுகளுக்கு எந்தத் துறைகள் மற்றும் எவ்வளவு தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
மொஸாம்பிக் - மருத்துவம் - 10 மில்லியன் டாலர்
போடியா - இளைஞர் திறன் - 9.7 மில்லியன் டாலர்
போடியா - கருத்துச் சுதந்திரம் - 2.3 மில்லியன் டாலர்
பராகுவே - சிவில் சமூக மையம் - 32 மில்லியன் டாலர்
செர்பியா - பொது கொள்முதல் திட்டம் - 14 மில்லியன் டாலர்
இந்தியா - தேர்தல் நிதி - 21 மில்லியன் டாலர்
வங்கதேசம் - வலுவான அரசியல் - 21 மில்லியன் டாலர்
நேபாளம் - நிதி கூட்டாட்சி - 20 மில்லியன் டாலர்
நேபாளம் - பல்லுயிர் பாதுகாப்பு - 19 மில்லியன் டாலர்
பீரியா - வாக்காளர் நம்பிக்கை திட்டம் - 1.5 மில்லியன் டாலர்
மாலி - சமூக ஒற்றுமை - 14 மில்லியன் டாலர்
தென்னாப்ரிக்கா - ஜனநாயகப் பணி - 2.5 மில்லியன் டாலர்
ஆசியா - கற்றல் மேம்பாடு அதிகரிப்பு - 47 மில்லியன் டாலர்
ஆசியா - பாலின சமத்துவம், பெண்கள் அதிகார மையம் - 40 மில்லியன் டாலர்
கொசோவோரோமா, அஸ்காலி, எகிப்து - சமூக பொருளாதார ஒற்றுமை அதிகரிப்பு - 2 மில்லியன் டாலர்