எலான் மஸ்க்
எலான் மஸ்க்எக்ஸ் தளம்

’இந்தியா மீது இனவெறி பதிவிட்டவர்’ | DOGE அமைப்பின் ஊழியரை மீண்டும் பணியமர்த்த மஸ்க் முடிவு!

இனவெறி தொடர்பாக, DOGE அமைப்பின் பணியாளர் சர்ச்சை கருத்துகளைப் பதிவிட்ட நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, அவரை பணியில் அமர்த்தும் பொறுப்பை எலான் மஸ்க் கையில் எடுத்துள்ளார்.
Published on

அமெரிக்க அரசின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் DOGE என்ற அமைப்பை அந்நாட்டின் அதிபரான டொனால்டு ட்ரம்ப் ஏற்படுத்தியுள்ளார். அரசின் செலவினத்தில் மிகப்பெரிய அளவில் நடக்கும் வீண்செலவையும், முறைகேட்டையும் தடுக்க இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கவனித்து வருகிறார். முன்னாதாக இவ்வமைப்பின் பொறுப்பில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி விலகினார்.

இந்த நிலையில், இவ்வமைப்பில் மார்கே எலஸ் என்பவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இனவெறி தொடர்பான கருத்துகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்துள்ளார். அதில் ஒன்று, ‘இந்திய வெறுப்பை இயல்பாக்குங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். இது, இந்தியர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதை, ’தி வால் ஸ்ட்டீட் ஜார்னல்' என்ற ஊடகம் வெளியுலகுக்குச் சுட்டிக்காட்டியது. இதையடுத்து, அவருக்கு எதிராகக் கண்டனங்கள் கிளம்ப, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், "அவர் மீண்டும் அழைத்து வரப்படுவார்..." என எலான் மஸ்க், தனது வலைத்தளத்தில் பதிவிட்டதன் மூலம், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முன்னதாக, ‘அந்தப் பணியாளரை மீண்டும் பணியில் அமர்த்தலாமா’ என அவர் தனது வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த 3,85,000 பேரில் 78 சதவிகிதம் பேர் ‘ஆம்’ என்று தெரிவித்தனர். தவிர, அவருடைய பதிவு 1,50,000 லைக்குகளைப் பெற்றிருந்தது. மேலும், 14 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளைப் பெற்றுள்ளது. இதையடுத்தே எலான் மஸ்க், இதனால் மஸ்க் "அவர் மீண்டும் கொண்டு வரப்படுவார். தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்வீக குணம்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்திய பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், (அவரது மனைவி உஷா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) மற்றும் அதிபர் டொனால்டு ட்ரம்பும் எலான் மஸ்கின் இந்தப் பதிவுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.

எலான் மஸ்க்
ட்ரம்ப் நிர்வாகத்தில் பதவி.. தொடக்கமே அதிரடி.. எலான் மஸ்க் பதிலடி.. விவேக் ராமசாமி சரவெடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com