SpaceX Reuters
உலகம்

ஒவ்வொரு குழந்தைக்கும் SpaceX பங்குகள்.. எலான் மஸ்க் எடுத்த திடீர் முடிவு!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஒரு பங்கை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். உலகளவில் கவனம் பெற்றுள்ள இந்த அறிவிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.

Premkumar S

எலான் மஸ்க்கால், கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், ராக்கெட் ஏவுதல், விண்வெளிப் பயணம் மற்றும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஜூன் மாதம் முதல்முறையாகப் பொதுச் சந்தையில் (IPO) விற்பனைக்கு வந்தது.

Elon Musk

இந்தச்சூழலில் தான், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு 18 வயதுகுட்பட்ட குழந்தைக்கும் 2027-ம் ஆண்டு முதல், தலா 1 Space X நிறுவனத்தின் பங்கு வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற பல நடவடிக்கைகள் இருக்கும்; அதில் முதல் அறிவிப்பு இது எனவும் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 16 ஆம் தேதிப்படி வர்த்தக முடிவில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 146.03 டாலராக உள்ளது.

அதை வைத்துப் பார்க்கும்போது, அமெரிக்காவில் உள்ள சுமார் 7 கோடியே 20 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு தலா ஒரு ஸ்பேஸ்எக்ஸ் பங்கு வழங்கினால், இதன் மொத்த மதிப்பு சுமார் 10.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் இது சுமார் 93 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

ஆனால், எந்த வயதுடைய குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள், பங்குகள் எவ்வாறு வழங்கப்படும், பெற்றோர்கள் ஏதேனும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமா? என்ற முழு விபரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை.