Elon mUsk, Larry Page, Sergey Brin, Jeff Bezos, Mark Zuckerberg  ChatGPT
உலகம்

ஃபோர்ப்ஸ் | உலக பில்லியனர் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடம்.. முகேஷ் அம்பானியின் இடம்?

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலக பில்லியனர்கள் பட்டியலில், இதுவரை இல்லாத அளவாக 3,428 பேர் இடம்பெற்றுள்ளனர்.

PT WEB

உலகப் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த மாதம் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலக பில்லியனர்கள் பட்டியலில், இதுவரை இல்லாத அளவாக 3,428 பேர் இடம்பெற்றுள்ளனர். இது உச்சத்தில் உள்ளவர்களின் செல்வம் எவ்வளவு விரைவாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூபாய் 9,200 கோடிக்கு மேல் சொத்து கொண்டவர்கள் பில்லியனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

எலான் மஸ்க்

ஃபோர்ப்ஸ் பட்டியலின் படி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பு 839 பில்லியன் டாலர் ஆகும். இது கடந்த ஆண்டைவிட 500 பில்லியன் டாலர்கள் அதிகம். உலகின் முதல் 'ட்ரில்லியனர்' என்ற அந்தஸ்தை அவர் விரைவில் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரைத் தொடர்ந்து கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் 257 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், செர்ஜி பிரின் 237 பில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அமேசான் நிறுவனர் 223 பில்லியன் டாலர் மதிப்புடன் 4வது இடத்திலும் , ஃபேஸ்புக் நிறுவனர் 218 பில்லியன் டாலர் மதிப்புடன் 5வது இடத்திலும் இருக்கிறார்கள் .

அதேபோல, உலகளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 229 பேருடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 989 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 610 பில்லியனர்களுடன் சீனா 2 இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 21-வது இடத்திலும், இந்தியாவில் முதலிடத்திலும் உள்ளார்.