Gold Walkway AI
உலகம்

துபாய்னா சும்மாவா? 24 காரட் தங்கத்தில் நடைபாதை.. வியப்பில் உலகம்!

இந்த தங்க நடைபாதையின் துல்லியமான நீளம், இதற்காகப் பயன்படுத்தப்படும் தங்கத்தின் மொத்த அளவு மற்றும் கட்டுமானச் செலவு குறித்த தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

துபாயில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 24 காரட் தங்கத்தால் உருவாக்கப்படும் நடைபாதை திறக்கப்படவுள்ளது. உலகிலேயே மிக நீளமான தங்க நடைபாதையாக இது இருக்கும் என்று துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்ட் தெரிவித்துள்ளது.

துபாய் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகின் மிக நீளமான மற்றும் முதல் 24-காரட் தங்க நடைபாதையை (24-Karat Gold Walkway) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. துபாயின் புகழ்பெற்ற 'டேய்ரா' (Deira) பகுதியில் அமைந்துள்ள 'துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்ட்' (Dubai Gold District) வளாகத்தில் இந்த ஆடம்பரமான பாதை அமையவிருக்கிறது.

Dubai Gold District

துபாயின் கோல்டு டிஸ்ட்ரிக்ட், கடந்த 2026 ஜனவரியில் தொடங்கப்பட்டது. தங்கம், நகைகள், தங்கக் கட்டிகள், மொத்த விற்பனை மற்றும் முதலீடு தொடர்பான வர்த்தகங்களை ஒரே இடத்தில் கொண்டு வருவது இதன் நோக்கமாகும்.

துபாய் ஊடக அலுவலகத்தின் தகவலின்படி, இந்தப் பகுதியில் தங்கம், நகைகள், வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

மேலும், மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய தங்கம் மற்றும் நகைக் கண்காட்சியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் அலுவலகங்கள் மற்றும் கடைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Dubai Gold District

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் (அதாவது 2026 டிசம்பர் இறுதிக்குள்) இந்த நடைபாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்ட்டின் வணிகத் துறை இயக்குநர் ரஷித் அல் ஹர்முடி தெரிவித்துள்ளார்.

இந்த தங்க நடைபாதையின் துல்லியமான நீளம், இதற்காகப் பயன்படுத்தப்படும் தங்கத்தின் மொத்த அளவு மற்றும் கட்டுமானச் செலவு குறித்த தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.