கம்போடியா எக்ஸ் தளம்
உலகம்

கம்போடியா, தாய்லாந்து போர்.. நிறுத்த ட்ரம்ப் முயற்சி!

கம்போடியா, தாய்லாந்து இடையே போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

PT WEB

கம்போடியா, தாய்லாந்து இடையே போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இது வரை இரு தரப்பிலும் 33 பொது மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வசிப்பிடத்தை விட்டு வேறு இடங்களில் தஞ்சம் அடைந்தனர். முன்னதாக போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களுடனும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். இதைத்தொடர்ந்து தனது ட்ரூத் சமூக தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், போரை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுடனான வர்த்தக பேச்சை தொடர இயலாது என்று கூறியதாக தெரிவித்திருந்தார்.

டொனால்டு ட்ரம்ப்

இதனால் போர் நிறுத்தம் குறித்த பேச இரு தலைவர்களும் இணங்கியதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார். இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியது தனக்கு நினைவுக்கு வருவதாகவும் ட்ரம்ப் அப்பதிவில் தெரிவித்திருந்தார். ஆனால் ட்ரம்ப்பின் இப்பதிவுக்கு பின்னர் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. தாய்லாந்து, கம்போடியா இடையில் உள்ள பிரிய விஹார் என்ற கோயிலின் சுற்றுப்பகுதியை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதுவே போர் வரை தீவிரமடைந்துள்ளது.