ட்ரம்ப், ஜோ பைடன் x page
உலகம்

”பைடனுக்கு ரகசியத் தகவல்கள் அனுப்பக் கூடாது” - உளவுத்துறைக்கு ட்ரம்ப் உத்தரவு!

முன்னாள் அதிபர் என்ற முறையில் ஜோ பைடனுக்கு ரகசியத் தகவல்களை அனுப்புவதை நிறுத்துமாறு உளவுத்துறைக்கு டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

PT WEB

கடந்த ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்றதிலிருந்தே ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்புகள் தினசரி வாடிக்கையாகி உள்ளது. அந்த வரிசையில் தற்போது முன்னாள் அதிபர் என்ற வகையில் பைடனுக்கு உளவுத்துறை தகவல்களை அனுப்புவதை நிறுத்த ட்ரம்ப் ஆணையிட்டுள்ளார். 2021இல்தான் தோல்வியுற்றபோது தனக்கு பைடன் செய்ததை தான் தற்போது அவருக்கு செய்வதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன், ட்ரம்ப்

மேலும் பைடனின் நினைவுத்திறன் மோசமாக உள்ளதால் அவரை நம்பி நாட்டின் ரகசியத் தகவல்களை தெரிவிப்பது சரியாக இருக்காது என்றும் ட்ரம்ப் தனது சமூகத் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே தென்னாப்ரிக்க நாட்டுக்கான நிதி உதவிகளை முடக்கவும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். வெள்ளையின மக்களுக்கு எதிராக தென்னாப்ரிக்காவில் வெள்ளையின மக்களுக்கு எதிராக கடைபிடிக்கப்படும் நிறவெறி பாகுபாடுகளை சுட்டிக்காட்டி இம்முடிவை ட்ரம்ப் எடுத்துள்ளார். மேலும் அமெரிக்க அரசின் கலை, கலாசார அமைப்பான கென்னடி சென்டரின் நிர்வாக்குழுவை ஒட்டுமொத்தாக கலைக்குள்ள ட்ரம்ப் தன்னையே அந்த மையத்தின் தலைவராக அறிவித்துக் கொண்டுள்ளார்