ஜோ பைடன், ஹண்டர் பைடன்
ஜோ பைடன், ஹண்டர் பைடன்எக்ஸ் தளம்

அமெரிக்கா | குற்றவழக்கில் மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்.. விமர்சித்த ட்ரம்ப்!

குற்ற வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தனது மகனான ஹண்டர் பைடனுக்கு அதிபர் ஜோ பைடன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
Published on

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. இதற்கிடையே, அதற்குமுன்பாக தற்போதைய அதிபரான ஜோ பைடன் தனது ஆட்சியின் கடைசி கட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், குற்ற வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தனது மகனான ஹண்டர் பைடனுக்கு அதிபர் ஜோ பைடன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதன்மூலம் அவருக்கு, தண்டனை அறிவிக்கப்பட்டாலும் ஹண்டர் பைடன் சிறை செல்லமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகனான, ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த ஆகிய இரண்டு வழக்குகள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இதில் வரி செலுத்துவதில் முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தண்டனை தொடர்பான விசாரணை, டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சமாக 17 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அதேபோல் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில், டிசம்பர் 12ஆம் தேதி அவருக்கு 16 மாதங்கள் முதல் அதிகபட்சம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இந்த நிலையில்தான் அதிபர் ஜோ பைடன், தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதாவது, அமெரிக்காவில் குற்றவழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி பலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையிலேயே மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இதையடுத்து, அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டாலும் அவர், சிறை செல்ல மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

ஜோ பைடன், ஹண்டர் பைடன்
அமெரிக்கா| ஜோ பைடன் மகன் குற்றவாளி... நீதிமன்றம் தீர்ப்பு.. அதிபர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா?

இதுதொடர்பாக ஜோ பைடன், “இன்று எனது மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளேன். நான் அதிபராக பொறுப்பேற்றது முதல் நீதித்துறையில் தலையிட மாட்டேன் என்று சொன்னபடி, இருந்து வருகிறேன். வீண் பழி சுமத்தி என் மகனைச் சிறையில் அடைத்தபோதும், நான் தலையிடவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் மகனுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

பொதுவாகப் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நபர்கள் வரி செலுத்தத் தவறினால்.. அவர்கள் வட்டி மற்றும் அபராதத்துடன் வரி செலுத்த வேண்டி இருக்கும். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது. ஆனால், எனது மகன் ஹண்டர் மீதான வழக்கு மட்டும் வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளது ஹண்டர் எனது மகன் என்ற ஒரே காரணத்திற்காக இதுபோல கிரிமினல் வழக்கை நடத்தியுள்ளார்கள். அவர்மீது முறையற்ற விசாரணையும் நடந்துள்ளது. இதையடுத்தே, நான் தற்போது பொது மன்னிப்பு வழங்கியுள்ளேன். ஒரு தந்தையாக அமெரிக்க அதிபராக நான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாக அவரது மகன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டபோது பதிலளித்த ஜோ பைடன், “நான் அதிபராக இருந்தாலும் அவர் எனக்கு மகன்தான். எனினும், நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். அதேநேரம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசித்துள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இத்தகைய நடவடிக்கையை அடுத்த அதிபராகப் பதவியேற்கவுள்ள ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன், ஹண்டர் பைடன்
அமெரிக்கா | பீச்சில் நடக்க முடியாமல் தடுமாறிய ஜோ பைடன்.. உதவிய மனைவி.. #ViralVideo

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com