ட்ரம்ப், ட்ரூடோ x page
உலகம்

”கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ட்ரம்ப் நிஜமாகவே ஆர்வம் காட்டுகிறார்” - ட்ரூடோ

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு ட்ரம்ப் நிஜமாகவே ஆர்வம் கொண்டிருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Prakash J

கனடாவில் வர்த்தக அமைப்பினருடன் மூடிய அறையில் நடந்த தனிப்பட்ட சந்திப்பின் போது ட்ரூடோ பேசிய தகவல்கள் மைக்கில் வெளியே கேட்டதாக அந்நாட்டு ஊடகமான CBC தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள இயற்கை வளங்கள் மூலம் பலனடைவதே ட்ரம்ப்பின் விருப்பம் என ட்ரூடோ பேசியதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும் பிரதமர் ட்ரூடோ பேசியதாக ஊடகங்களில் வெளியான இத்தகவல் குறித்து பிரதமர் அலுவலகம் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஜஸ்டின் ட்ரூடோ

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், அதிரடி காட்டி வருகிறார். அதில் குடியேற்றக் கொள்கையும் ஒன்று. இதற்காக கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, “கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாகப் பிரிக்கலாம். அதற்கு ஆளுநராக உங்களை (ட்ரூடோ) நியமிக்கலாம்” என ட்ரூடோவிடம் ட்ரம்ப் கூறினார். தொடர்ந்து கனடா - அமெரிக்கா எல்லை குறித்த வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்து மீண்டும் பிரச்னையைத் தூண்டியிருந்தார். இந்த விஷயத்திற்கு கனடா பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.