அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பிறகு தனது முதல் உரையில், மெக்சிகோ வளைகுடாவின் பெயர் ’அமெரிக்கா வளைகுடா’ என மாற்றம் செய்யப்படுமென அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். மேலும் இந்தப் பெயர் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, கூகுள் மேப்பில், அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டும் இந்த மாற்றம் செய்யப்படுமென கூகுள் நிறுவனமும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அந்தப் பெயர் மாற்றம் குறித்து பெருமிதம் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்கிற கொள்கையில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குடியேற்றக் கட்டுப்பாடுகள், விசா கட்டணத்தில் மாற்றம் என அவற்றில் அடக்கம். இன்னொரு புறம், நாடுகளைக் கைப்பற்றுவது தொடர்பாகவும் அவ்வப்போது பேசி வருகிறார். அந்த வகையில் கடந்த காலங்களில் கனடா, மெக்சிகோ வளைகுடா, பனாமா கால்வாய், கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு வேண்டும் எனக் கோரிக்கை வைப்பதுடன், அதுகுறித்த வரைபடங்கள் மற்றும் வீடியோக்களை இணைத்துப் பதிவிடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில், அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பிறகு தனது முதல் உரையில், மெக்சிகோ வளைகுடாவின் பெயர் ’அமெரிக்கா வளைகுடா’ என மாற்றம் செய்யப்படுமென அறிவித்தார்.
மேலும் இந்தப் பெயர் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, கூகுள் மேப்பில், அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டும் இந்த மாற்றம் செய்யப்படுமென கூகுள் நிறுவனமும் தெரிவித்திருந்தது. அதாவது, மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்கா வளைகுடா என்று தெரியும் என அது அறிவுறுத்தியிருந்தது.
அதேநேரத்தில், மெக்சிகோவில் இருப்பவர்களுக்கு வழக்கம்போல 'Gulf of Mexico' என்றே காட்டப்படும். இந்த நிலையில், மெக்சிகோ வளைகுடா பற்றி மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார். அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்த பிரசாரத்தில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், ”தான் தனிப்பட்ட முறையில் கூகுள் மேப்ஸை (Google Maps) தொடர்புகொண்டு மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றக் கோரினேன். தனது செல்வாக்கிற்கு மதிப்பளித்து அந்நிறுவனம் உடனடியாகப் பெயரை மாற்றியது’எனப் பெருமையாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், உண்மை அதுவல்ல எனக் கூறும் கூகுள், அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ புவியியல் ஆவணங்கள் மாறியதால் மட்டுமே கூகுள் தனது தொழில்நுட்பக் கொள்கையின்படி அமெரிக்கப் பயனர்களுக்கு மட்டும் அப்பெயரைக் காட்டியதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ட்ரம்ப் தனது தனிப்பட்ட செல்வாக்கினால் கூகுள் பணியாளர்களை அழைத்து பெயரை மாற்றியதாகக் கூறுவது வெறும் அரசியல் பிரசாரப் பேச்சே ஆகும் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, இதே பாணியில் கனடா எல்லையிலுள்ள 'ஒன்டாரியோ ஏரி'யை (Lake Ontario) 'லேக் அமெரிக்கா' (Lake America) என மாற்ற டிரம்ப் உத்தரவிட்டதும் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.