எலான் மஸ்க், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா | எலான் மஸ்க் பணியைப் பாராட்டிய அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்கா அரசின் திறன் மேம்பாட்டுத்துறை தலைவரான எலான் மஸ்க் திறம்பட பணியாற்றி வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

PT WEB

அமெரிக்கா தொழிலதிபரான எலான் மஸ்க், அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டுத்துறை தலைவராக ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டார். அவரது பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் சூழலில், வெள்ளை மாளிகை அதிபர் மேஜையில் எலான் மஸ்க் அமர்ந்திருப்பது போன்று பிரபல டைம்ஸ் இதழ் அட்டைப் படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், தனக்கு கொடுக்கப்பட்ட பணியை எலான் மஸ்க் திறம்பட கையாண்டு வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க், ட்ரம்ப்

அமெரிக்க அரசு நிர்வாகங்களில் உள்ள ஊழல்கள், முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க எலான் மஸ்க் உதவுவதாக கூறிய ட்ரம்ப், பாதுகாப்பு மற்றும் கல்வித்துறை செலவீனங்களை ஆராய பொறுப்பை வழங்கியுள்ளதாக கூறினார். எலான் மஸ்க் தலைமையிலான அரசு திறன் மேம்பாட்டுத்துறையின் செயல்பாடுகளால் பெருமிதம் கொள்வதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.