modi, trump meta ai
உலகம்

மருந்துப் பொருட்களுக்கு 100% வரி.. ட்ரம்பின் அதிரடியால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மற்றும் பிராண்டட் மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Prakash J

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மற்றும் பிராண்டட் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மற்றும் பிராண்டட் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரம், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே தங்கள் ஆலைகளை அமைத்தால், அல்லது அதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருந்தால், அவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த வரிவிதிப்பு வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

donald trump

இதனால், இந்தியாவுக்கு மேலும் பாதிப்பை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. தவிர, அமெரிக்காவில் சில மருந்துகளின் விலைகள் இரட்டிப்பாகும் எனவும் கருதப்படுகிறது. மருந்துப் பொருட்களைத் தவிர, அமெரிக்கா அக்டோபர் 1 முதல் கனரக லாரிகள், மெத்தை தளபாடங்கள், சமையலறை அலமாரிகள் மற்றும் குளியலறை வேனிட்டிகள் ஆகியவற்றிற்கும் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவுக்கு 3.6 பில்லியன் டாலர் (31.626 கோடி ரூபாய்) மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், நடப்பாண்டில் முதல் பாதியில் மட்டும் 3.7 பில்லியன் டாலர் (ரூ.32.505 கோடி) மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அமெரிக்க மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கு 100 சதவிகித வரி விதிக்கப்பட்டிருப்பதால், அது இந்திய மருந்து நிறுவனங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டுச் சந்தையாக உள்ளது.

modi, trump

அரசாங்க தரவுகளின்படி, FY25இல் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி ஆண்டுக்கு 9.40 சதவீதம் அதிகரித்து 30.46 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டு $8.1 பில்லியனில் இருந்து 21 சதவீதம் அதிகமாகும். இது இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் மொத்தம் 40 சதவீதமாகும். இந்தியாவின் ஜெனரிக்ஸ் தொழில் அமெரிக்காவில் மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதால், இந்தத் துறையின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படுவது தேவையை கடுமையாகப் பாதிக்கலாம். மறுபுறம், 100 சதவீத வரி விதிப்பு இந்திய மருந்துப் பொருட்களின் விலையை அதிகரிக்கும் என்பதால், அவற்றின் தேவை குறையவும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.