ballistic missile  Reuters
உலகம்

Diego Garcia வெறும் Teaserதான்! லண்டன், பாரிஸ் மீது ஈரானின் அடுத்த குறியா?

4,000 கிலோமீட்டர் தூரம்: ஈரானின் ஏவுகணை திறன் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளது.

PT WEB

Diego Garcia தீவை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 4,000 கிலோமீட்டர் தூரத்தை அடையும் ஈரானின் ஏவுகணை திறன், மத்திய கிழக்கைத் தாண்டி ஐரோப்பிய நகரங்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா–ஈரான் மோதலின் போது, Diego Garcia அமெரிக்காவின் முக்கியமான ராணுவ மையங்களில் ஒன்றாக இருந்தது. அமெரிக்காவின் நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் உள்ளிட்ட ராணுவ சொத்துகள் இந்தப் பகுதியில் இருந்து செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனால், தங்களை தாக்கும் அமெரிக்காவின் முக்கிய ராணுவ மையத்தை தொலைவில் இருந்தே தாக்கும் திறன் தங்களுக்கு இருப்பதை காட்ட இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் அமைந்துள்ள Diego Garcia தீவை ஈரான் ஏவுகணைகள் மூலம் குறிவைத்ததாக கூறப்படுகிறது.

Ballistic missile

Diego Garcia பிரிட்டன் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் தீவு. இங்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து முக்கியமான ராணுவ தளத்தை இயக்கி வருகின்றன. ஈரானில் இருந்து இந்தத் தீவு சுமார் 3,800 முதல் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தகவல்களின்படி, ஈரானில் இருந்து இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் Diego Garcia-வை நோக்கி ஏவப்பட்டன. இதில் ஒரு ஏவுகணை நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்து கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. மற்றொரு ஏவுகணை அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

deigo garcia

இதனால் Diego Garcia ராணுவத் தளத்திற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஈரான் தனது ஏவுகணை திறனை 2,000 கிலோமீட்டர் வரம்புக்குள் மட்டுமே வைத்திருப்பதாக கூறி வந்த நிலையில், Diego Garcia தீவை நோக்கி நடத்தப்பட்டதாக கூறப்படும் ஏவுகணை தாக்குதல் முயற்சி சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியது. சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்ததாகக் கூறப்படும் இந்த முயற்சி, ஈரானின் ஏவுகணை திறன் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில் கடந்த பல தசாப்தங்களாக ஈரான் தனது ஏவுகணைகளின் அதிகபட்ச தாக்குதல் தூரத்தை 2,000 கிலோமீட்டர் என்ற எல்லைக்குள்ளேயே பொதுவெளியில் பராமரித்து வந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இந்த எல்லையைத் தாண்டி, இன்னும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக ஈரான் நாட்டின் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமியா தெரிவித்துள்ளார்.

RAF Fairford airbase

மேலும் பிரிட்டனின் RAF விமானதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர் விமானங்கள் மீது நாசவேலை அல்லது தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டனின் RAF விமானதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த B-1B லான்சர் விமானங்கள் அமெரிக்காவுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு ஈரானின் நீண்ட தூர ஏவுகணை குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.

ஈரான் உண்மையில் சுமார் 4,000 கிலோமீட்டர் தூரத்தை அடையும் ஏவுகணைகளை செயல்படுத்தும் திறனை பெற்றால் மத்திய கிழக்கைத் தாண்டிய பகுதிகளும் அதன் தாக்குதல் வரம்புக்குள் வரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனால் லண்டன், பாரிஸ், பெர்லின் போன்ற ஐரோப்பிய நகரங்கள் எதிர்காலத்தில் ஈரானின் நீண்டதூர ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சில பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.