\
america vs iron
america vs ironani

ஈரான் போரால் பல பில்லியன் இழப்பு! எண்ணெய் கட்டமைப்புக்கு புதிய சிக்கல்!எச்சரிக்கும் வளைகுடா நாடுகள்!

உலகம் முழுவதும் உள்ள எண்ணெய் விநியோகச் சங்கிலியும் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது!
Published on: 
Summary

ஈரான் போரால் எண்ணெய் விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் எண்ணெய் குழாய்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதை சீரமைக்க பல பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என வளைகுடா நாடுகள் எச்சரிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் கையிருப்பு குறைந்ததால், எரிபொருள் விலை உயர்வு நீண்டகாலத்துக்கு தொடரும்.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாகக் கூறி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்து வருகின்றன. ஈரானும் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. இதனால் பாதிக்கப்பட்டது ஈரானும், மத்திய கிழக்கு நாடுகளும் மட்டுமல்ல... உலகம் முழுவதும் உள்ள எண்ணெய் விநியோகச் சங்கிலியும் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது!

எண்ணெய்க் குழாய்கள்... சுத்திகரிப்பு நிலையங்கள்... எரிவாயு ஆலைகள்... எண்ணெய்க் கப்பல்கள் என பல்வேறு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றை மீண்டும் சீரமைக்க பல பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என மத்திய கிழக்கின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

Hormuz
HormuzReuters

அதுமட்டுமல்லாமல்... போரால் உலக நாடுகளின் எண்ணெய் கையிருப்பும் வேகமாகக் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான அராம்கோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அமின் நாசரும், குவைத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷேக் நவாஃப் அல்-சபாவும் லண்டனில் நடைபெற்ற எரிசக்தி நுண்ணறிவு மன்றத்தில் முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட நீண்டகால இடையூறு, உலகின் முக்கியமான எண்ணெய் விநியோகப் பாதைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அமின் நாசர் தெரிவித்துள்ளார்.

america vs iron
அரபு உலகில் தொடங்கிய அடுத்த போர்.. களமிறங்கிய பாக்., துருக்கி.. முடிவுக்கு வருமா ஈரானின் ஆதிக்கம்?

போர் தொடங்கியபோது உலக நாடுகளிடம் சுமார் 10 பில்லியன் பீப்பாய்கள் அளவுக்கு எண்ணெய் கையிருப்பு இருந்ததாகவும், இதுவரை சுமார் 3 பில்லியன் பீப்பாய்கள் அளவிலான எண்ணெய் விநியோகம் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், தற்போது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் உள்ள பாதுகாப்பு இடைவெளி மிகவும் குறைந்துவிட்டதாகவும், கையிருப்பை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதாவது... போர் இன்றே முடிவுக்கு வந்தாலும், பிரச்சினை உடனடியாக முடிவுக்கு வந்துவிடாது!

oil
oil reuters

குறைந்துபோன எண்ணெய் கையிருப்பை மீண்டும் நிரப்ப வேண்டும்... சேதமடைந்த எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டும்... மாற்று ஏற்றுமதி வழித்தடங்களை உருவாக்க வேண்டும்... மேலும், பல நாடுகளில் எரிபொருளைச் சேமிப்பதற்கான புதிய கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் மட்டுமல்லாமல், எண்ணெயைப் பயன்படுத்தும் நாடுகளும் இந்த உள்கட்டமைப்பு முதலீட்டில் பங்கெடுக்க வேண்டும் என அமின் நாசர் தெரிவித்துள்ளார். சேதமடைந்த கட்டமைப்புகளைச் சீரமைத்து, எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகத்துக்கு மாற்று வழிகளை உருவாக்குவதுதான் நீண்டகாலத் தீர்வாக இருக்கும். அதனால்தான்... ஈரான் போர் முடிவுக்கு வந்தாலும், அதன் தாக்கம் எண்ணெய் சந்தையிலும், எரிபொருள் விலையிலும், உலக நாடுகளின் உள்கட்டமைப்பு முதலீட்டிலும் நீண்ட காலத்துக்கு தொடரும் என எரிசக்தித் துறை நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

america vs iron
மணிக்கு 6,200 கி.மீ வேகம்.. 20 நிமிடத்தில் மொத்தமாக பேரழிவு.. சீனாவின் தூக்கத்தை பறித்த ஜப்பான்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com