Iran - UAE web
உலகம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. ஈரானால் நிலைகுலையும் UAE!

ஈரான் போரில் ஐக்கிய அரபு அமீரகம் அதிகமாக பாதிக்கப்படும் நிலையில், நாள்தோறும் தாக்குதல்களும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன..

PT WEB

ஐக்கிய அரபு அமீரகம், ஈரானிடமிருந்து வரும் வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, பல ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளது. மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள், 25 ஆளில்லா விமானங்கள் மற்றும் 4 பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் உட்பட, ஈரானிடமிருந்து வந்த பல வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறித்து அழித்ததாக தெரிவித்ததுள்ளது.

ஈரானின் ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களையும் UAE அமைச்சகம் வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, மோதல் தீவிரமடையத் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,773 ஆளில்லா விமானங்கள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 345 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மார்ச் 22ம் தேதி காலையில் ஏற்பட்ட புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாட்டின் இராணுவத் திறன்கள் தற்காப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது. மேலும், மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்கியதிலிருந்து, ஈரானிலிருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தளுக்கு அமீரகமும் பதிலடி கொடுத்து வருகிறது.

மார்ச் 21 நிலவரத்தின் படி, ஈரானிலிருந்து ஏவப்பட்ட 341 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,748 ஆளில்லா விமானங்களை அமிரகம் எதிர்கொண்டுள்ளது எனவும் இந்தத் தொடர் தாக்குதல்களின் விளைவாக, இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய அமிரகம் உறுதிப்படுத்தியுள்ளடு.