china x page
உலகம்

ஏவுகணைகளை செலுத்தி போர் ஒத்திகை.. தைவானுக்கு சீனா எச்சரிக்கையா?

தைவானை அச்சுறுத்தும் வகையிலும், தைவானை சுற்றி பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையிலும் தனது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சீனா அனுப்பியுள்ளது.

Prakash J

சீன கடல் பகுதி அமைந்துள்ள ஒரு சிறு தீவே, தைவான். ஆனால், தைவானை தனி நாடு அல்ல என்றும், அது சீனாவின் ஒரு பகுதி என்றும் தொடர்ந்து சீனா சொல்லிவருகிறது. இதற்கு தைவான் அரசு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தைவான் அதிபர் லாய் சிங் தேவ்-ஐ பிரிவினைவாதி என்றும், தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சீனா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. தவிர, தைவானை அச்சுறுத்தும் விதமாக போர்ப் பயிற்சியிலும் சீனா ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இதனால், பல ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே முட்டல் மோதல் நிலவி வருகிறது.

china

அந்த வகையில், படைகளை வைத்து தற்போதும் போர்ப் பயிற்சியில் சீனா ஈடுபட்டிருப்பது உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தைவானை அச்சுறுத்தும் வகையிலும், தைவானை சுற்றி பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையிலும் தனது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சீனா அனுப்பியுள்ளது.

தொடர்ந்து 2-வது நாளாக தைவான சுற்றி சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பயிற்சியில் சீன கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பிரிவினைவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.