china president xi jinping ends 2024 with a threat to taiwan
ஜின்பிங்எக்ஸ் தளம்

”தைவான் இணைவதை யாராலும் தடுக்க முடியாது” - புத்தாண்டுச் செய்தியில் அதிரடி காட்டிய சீன அதிபர்!

”சீனாவுடன் தைவான் இணைவதை யாராலும் தடுக்க முடியாது” என அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Published on

சீன கடல் பகுதி அமைந்துள்ள ஒரு சிறு தீவே, தைவான். ஆனால், தைவானை தனி நாடு அல்ல என்றும், அது சீனாவின் ஒரு பகுதி என்றும் தொடர்ந்து சீனா சொல்லிவருகிறது. இதற்கு தைவான் அரசு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தைவான் அதிபர் லாய் சிங் தேவ்-ஐ பிரிவினைவாதி என்றும், தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சீனா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறது. தவிர, தைவானை அச்சுறுத்தும் விதமாக போர்ப் பயிற்சியிலும் சீனா ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இதனால், பல ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே முட்டல் மோதல் நிலவி வருகிறது.

அந்த வகையில், கடந்த அக்டோபரில்கூட முப்படைகளை வைத்து, தைவானை கைப்பற்றுவது போன்று சீனா போர் ஒத்திகை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலளித்த தைவான், “சீனா தங்கள் எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளது. தாங்கள் சூழலை கண்காணித்து வருகிறோம். சூழலுக்கு ஏற்ப செயல்படுவோம்” எனத் தெரிவித்திருந்தது.

china president xi jinping ends 2024 with a threat to taiwan
jinpingx page

இந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ”தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள சீனர்களான நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தைவானை சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார். இது, அந்த நாட்டுக்கு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

china president xi jinping ends 2024 with a threat to taiwan
20 போர் விமானங்கள்.. 8 போர்க்கப்பல்கள்.. எல்லையில் நுழைந்த சீன ராணுவம்.. தைவான் குற்றச்சாட்டு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com