சீனா முகநூல்
உலகம்

ரூ.2 கோடி நஷ்ட ஈடு கொடுத்தும் வீட்டை விற்க மறுத்த தாத்தா... இப்ப அந்த வீட்ட பாருங்களேன்..!

சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியை செய்ய அந்நாட்டு அரசாங்கம் எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சீனாவில் நெடுஞ்சாலை அமைப்பதற்காக , கையப்படுத்தப்பட்ட நிலத்தில் வசித்த மக்களுக்கு அந்நாட்டு அரசே இழப்பீடு தொகை கொடுத்து காலி செய்ய ஏற்பாடு செய்தது. ஆனால், தொகை ஏற்க மறுத்த இடத்தையும் காலி செய்ய மறுத்த தாத்தாவின் நிலைமை தற்போது கவலைகிடமாக மாறியுள்ளது.

சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணியை செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியை செய்ய அந்நாட்டு அரசாங்கம் எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தது. இதற்காக அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு அவர்களின் நிலத்திற்கு ஏற்றார் போல இழப்பீட்டு தொகையை கொடுத்தது. அரசு அளித்த தொகையை பெற்றுக்கொண்டு காலி செய்தனர் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள்.

ஆனால், அங்கு இரண்டு மாடி கட்டிடத்தில் தனது 11 வயது பேரனுடன் வசித்து வரும் ஹுவாங் பிங் என்ற தாத்தா , இடத்தை காலி செய்ய முடியாது என்றும் என்ன ஆனாலும் இங்கேதான் வசிப்பேன் என்றும் பிடிவாதம் பிடித்துள்ளார்.

இதனால், அதிப்தி அடைந்த அரசாங்க அதிகாரிகள், தாத்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். எனவே, தாத்தாவிற்கு வேறு இடத்தில் தங்குவதற்கு நிலம் ஒதுக்குவதாகவும், ரூ. 2 கோடி வரை நஷ்ட ஈடு கொடுப்பதாகவும் பல முறை பேச்சு வார்த்தை நடத்தி சம்மதிக்க முயன்றனர்.

ஆனாலும், ஹுவாங் பிங் ஒத்துக்கொண்டபாடில்லை. இதனால், வேறு வழியில்லாமல், தாத்தாவின் வீட்டை சுற்றி வலது பக்கம் இடது பக்கம் என்று எல்லா பக்கங்களிலும் நெடுஞ்சாலை அமைக்கும் பணியை ஊழியர்கள் தொடங்கினர். தற்போது பயங்கர சத்ததிற்கு மத்தியில் தாத்தாவின் வீடு அமைந்திருக்கிறது.

இதனால், வருத்தம் தெரிவித்துள்ள தாத்தா, ஹூவாங், “முந்தைய காலத்திற்கு மீண்டும் செல்ல முடியும் என்ற வாய்ப்பு கிடைத்தால், அரசாங்கம் எனக்கு கொடுத்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வேன். இப்போது நான் ஒரு பெரிய பந்தயத்தில் தோற்றது போல உணர்கிறேன். வாகனங்களின் இரைச்சல், தூசியுடன், இந்த வீட்டில் இருக்க முடியாது. நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு என்னால் வசிக்க முடியுமா என்று கூட தெரியாது.” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, தாத்தாவின் வீடு நெடுஞ்சாலைகளுக்கு மத்தியில் பெரிய பள்ளத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இதுகுறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.