வருடாந்தர பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 7.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
இந்தோ பசிஃபிக் பகுதியிலும், அதைத் தாண்டியும் உள்ள எதிரிகளை எதிர்கொள்வதற்காக ராணுவம், விமானப்படை, கடற்படை, அணுசக்தி, விண்வெளி, கணினி என பாதுகாப்பு சார்ந்த அனைத்து துறைகளையும் சீனா வலுப்படுத்த முனைந்துள்ளது. 7.2 சதவீத அதிகரிப்பின் மூலம் சீனாவின் ஒட்டுமொத்த ஒதுக்கீடு 245 பில்லியன் டாலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புத் துறைக்கு 79 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது இந்தியா. சீனா, இந்தியாவைவிட மூன்று மடங்கு அதிகத் தொகையை ஒதுக்குகிறது. பாதுகாப்புத் துறைக்கு 900 பில்லியன் டாலர்களை ஒதுக்கும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் சீனா, வெளியே தெரிவிப்பதைவிட 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக நிதி ஒதுக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.