model image x page
உலகம்

சீனா கட்டும் பெரிய அணை.. இந்தியாவிற்கான 85% நீரின் அளவு குறைய வாய்ப்பு.. ஆய்வில் பகீர் தகவல்!

சீனாவின் உலகின் மிகப்பெரிய அணை திட்டத்தால், இந்தியாவிற்கான 85 விழுக்காடு நீரின் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Prakash J

சீனாவின் உலகின் மிகப்பெரிய அணை திட்டத்தால், இந்தியாவிற்கான 85 விழுக்காடு நீரின் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சீனா கட்டும் உலகின் மிகப்பெரிய அணை

இந்திய எல்லையையொட்டி தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 11 லட்சம் கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டு, அதற்கான பணிகளில் களமிறங்கியுள்ளது. இதன்மூலம், ஐந்து பெரிய நீர்மின் நிலையங்கள் அமையும் எனவும், அதன்வாயிலாக ஆண்டுதோறும் 300 பில்லியன் கிலோவாட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் தனது சுத்தமான எரிசக்தி இலக்குகளுக்கு முக்கியமானது என்றும், இதனால் இந்தியாவிற்குப் பாதிப்பில்லை என்று சீனா கூறினாலும், இவ்விவகாரம், கடந்த சில மாதங்களாகவே இந்திய - சீன உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது.

சியாங் நதி

சீனா கட்டும் அணையால் இந்தியா கவலை

சீனா அதிக அளவு தண்ணீரை வெளியேற்றும் பட்சத்தில், அதனால் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கலாம் அல்லது வறட்சியைச் சந்திக்கலாம்

ராய்ட்டர்ஸ் தளம் வெளியிட்டுள்ள இதுதொடர்பான கட்டுரையின்படி, இதன் கட்டுமானம் இந்தியாவிற்குள் நுழையும் நீரின் அளவையும் நேரத்தையும் கட்டுப்படுத்தும் திறனை சீனாவுக்கு வழங்கக்கூடும். மேலும், இது அதிக அளவு தண்ணீரை வெளியேற்றும் பட்சத்தில், அதனால் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கலாம் அல்லது வறட்சியைச் சந்திக்கலாம் என ஆய்வுகள் தெரிவிப்பதால் இந்தியா கவலை கொண்டுள்ளது. மேலும், சீனாவின் இந்தத் திட்டம், பிரம்மபுத்திரா நதியின் மீது பெய்ஜிங் தனது கட்டுப்பாட்டை ஆயுதமாகக் கைப்பற்றக்கூடும் என்ற கவலையையும் இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கடந்த வாரம் இந்தியா வந்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசித்தாகவும் கூறப்படுகிறது. சிந்து நதி தொடர்பாக பாகிஸ்தானுடனான அதன் தற்போதைய ஒப்பந்தத்தைப் போலன்றி, இந்தியா சீனாவுடன் விரிவான நீர் ஒப்பந்தம் எதையும் கொண்டிருக்கவில்லை. இது, சீனாவுக்கு ஆதரவாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கான 85 விழுக்காடு நீரின் அளவு குறைய வாய்ப்பு

மறுபுறம், சீனாவின் இந்த அணை திட்டத்தால், இந்தியாவிற்கான 85 விழுக்காடு நீரின் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆதாரங்கள் மற்றும் ஆவணத்தின்படி, சீன அணை பெய்ஜிங்கிற்கு 40 பில்லியன் கன மீட்டர் தண்ணீரை அல்லது ஒரு முக்கிய எல்லைப் புள்ளியில் ஆண்டுதோறும் பெறப்படும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கிற்கு சற்று அதிகமாகத் திருப்பிவிட அனுமதிக்கும் என்று இந்தியா நம்புகிறது. இத்தகைய நடவடிக்கையின் தாக்கம் குறிப்பாக, பருவமழை அல்லாத மாதங்களில் உணரப்படும் எனத் தெரிகிறது. அங்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை உயர்ந்து நிலங்கள் தரிசாக மாறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

model image

இந்தியா சொந்த அணையைக் கட்டவேண்டிய நிர்ப்பந்தம்

அதேநேரத்தில் சீனாவின் இந்தத் திட்டத்தால், விளைவுகளைத் தணிக்க, இந்தியா தனது சொந்த அணையை உருவாக்கும் திட்டங்களை விரைவுபடுத்தத் தூண்டியுள்ளன. திபெத்தின் ஆங்சி பனிப்பாறையிலிருந்து வரும் நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த 2000களின் முற்பகுதியில் இருந்து இந்திய அரசாங்கம் திட்டங்களை பரிசீலித்து வந்தது. இது சீனா, இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கீழ்நோக்கி 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பராமரிக்கிறது.

இந்திய அணைக்கு உள்ளூர் மக்களே எதிர்ப்பு

அணை உருவானால் 1 லட்சம் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அணை கட்டுவதற்கான இந்தியாவின் திட்டங்களுக்கு ரூ.1.5 டிரில்லியன் செலவாகும்

இருப்பினும், இந்தத் திட்டங்களுக்கு அருணாச்சலப் பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அருணாச்சலத்தின் ஆதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் அப்பகுதியில் நெல், ஆரஞ்சு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு விவசாயத்தை நம்பியுள்ளனர். இந்தியா அணை கட்டும் பட்சத்தில், அதனால், 16 ஆதி கிராமங்கள் பாதிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும், இது 10,000 மக்களை நேரடியாகப் பாதிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அணை உருவானால் 1 லட்சம் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அணை கட்டுவதற்கான இந்தியாவின் திட்டங்களுக்கு ரூ.1.5 டிரில்லியன் செலவாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா சீனா
இந்தியா சீனாவுக்கு எதிராக அணை கட்டாவிட்டால், நீர் சார்ந்த தொழில் மற்றும் விவசாயத்தை நம்பியுள்ள அசாமின் குவஹாத்தியில், விநியோகத்தில் 11% குறைப்பு ஏற்படும்

அணை கட்டாவிட்டாலும் இந்தியாவிற்குப் பாதிப்பு!

இன்னொரு புறம், இவ்வணைக்கான கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டிய பிறகு தொடங்கப்பட்டாலும், அதைக் கட்ட ஒரு தசாப்தம் ஆகலாம் என்றும் சீனாவின் திட்டத்திற்குப் பிறகே இது நிறைவடையும் என்றும், மழைக்காலத்தின்போது பெய்ஜிங் திடீரென தண்ணீரை வெளியிட்டால், கட்டுமானத்தின்போது இந்தியா பாதிப்பைச் சந்திக்கும் எனவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சீனாவின் நீர் வெளியேற்றத்திற்கு எதிராக நீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தவும், தடுப்பணை அமைக்கவும் 9.2 பில்லியன் கன மீட்டர் நீர்த்தேக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியா சீனாவுக்கு எதிராக அணை கட்டாவிட்டால், நீர் சார்ந்த தொழில் மற்றும் விவசாயத்தை நம்பியுள்ள அசாமின் குவஹாத்தியில், விநியோகத்தில் 11% குறைப்பு ஏற்படும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.