பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படவுள்ள உலகின் மிகப்பெரிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என சீனா விளக்கமளித்துள்ளது.
சீனா வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படவுள்ள அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நீண்ட ஆய்வு செய்து அணை கட்டுமானம், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சீனா விளக்கமளித்துள்ளது.
இந்த திட்டம் குறித்து இருநாடுகளுடன் சீனா தொடர்ந்து தொடர்பில் இருக்குமெனவும் கூறப்பட்டுள்ளது. இந்திய எல்லையையொட்டி தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 11 லட்சம் கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.