சிறை pt web
உலகம்

பூர்வக் குடிகளுக்கு கொடும் நாடா கனடா? நடப்பது என்ன?

குடியேறிகளின் சொர்க்கமாகப் பேசப்படும் கனடா அதன் பூர்வக்குடிகளுக்கு கொடும் நாடாக மாறிவருகிறது. கனடாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூர்வக் குடிகளின் விகிதம் அதிகரிப்பதை எந்த அரசாலும் தடுக்க முடியவில்லை.

PT WEB

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராகப் பதவியேற்ற ஜஸ்டின் ட்ரூடோ பூர்வக்குடிகள் சிறை வைக்கப்படுவதை கணிசமாகக் குறைப்பதாக வாக்குறுதி அளித்தார். போதைப் பொருள், ஆயுதங்கள் சார்ந்த சில குற்றங்களுக்கான சிறைத் தண்டனைக் காலத்தைக் குறைத்தார். ஆனால் 2015ம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரில் ஒருவர் பூர்வக்குடியாக இருந்தார் என்றால் இப்போது அந்த விகிதம் மூன்றில் ஒருவர் என்று அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ட்ரூடோ பிரதமர் பதவியிலிருந்து விரைவில் விலகவுள்ளார்.

சிறைவாசிகளில் பூர்வக்குடிகளின் விகிதம் அதிகமாக இருப்பது பல மேற்கத்திய நாடுகளில் நிலவும் பிரச்சினை. அமெரிக்காவில் பிற பிரிவினரைவிட இரண்டு மடங்கு அதிகமாக பூர்வக்குடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்ட அபார்ஜினல்ஸ் என்னும் பூர்வக்குடிகளின் எண்ணிக்கை 15 மடங்கு அதிகம்.

கனடாவில் சிறையில் அடைக்கப்படும் பூர்வக்குடிகளுக்கு பெரும்பாலும் பரோல் மறுக்கப்படுகிறது. மேலும் அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் காவல் துறையினரின் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர்.