model image
model image freepik
உலகம்

கவர் நிறைய பணம்: எழுதியிருந்த ஒற்றை வார்த்தை.. உரிமையாளரிடம் சேர்க்க புதிய யுக்தியைக் கையாண்ட நபர்!

Prakash J

கிடைப்பதைக் கொண்டுவாழ்வதும், கிடைத்தாலும் அதைக் கொண்டுபோய் உரியவரிடம் சேர்க்கும் நபர்களும், இன்று உலகம் எங்கும் ஏதோ ஓர் மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாய் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், தற்போது கனடாவிலும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

model image

கடந்த ஜனவரி 18ஆம் தேதி இரவு, கனடா வான்கூவரைச் சேர்ந்த டாலியா பால் (Talia Ball) என்பவர், கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது சாலையில் கவர் ஒன்று கிடப்பதைக் கவனித்துள்ளார். அதை எடுத்துப் பிரித்துப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அந்த கவருக்குள் பெரும்தொகையிலான பணம் இருந்தது. மேலும், அந்தக் கவரில் ‘குழந்தைகளுக்காக’ என எழுதப்பட்டிருந்ததையும் கவனித்தார். அதை, யாரோ ஒருவர்தான் தவறவிட்டிருக்க வேண்டும் என எண்ணிய அவர், உடனே சமூக வலைதளங்களில் இதுகுறித்த பதிவை வெளியிட்டார். தாம் கண்டெடுத்த இடம் முதல் அதிலிருந்த மொத்த பணத்தையும் குறிப்பிட்டு, அதற்கான ஆதாரங்களைக் காட்டும் உரிமையாளரிம் பணம் வழங்கப்படும் என அதில் தெரிவித்திருந்தார். இது, கொஞ்ச நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதையும் படிக்க: மகனைக் கீறிய பூனை: அடித்துக் கொன்ற தந்தை.. 8 மாத சிறைத் தண்டனையுடன் அபராதம் விதித்த நீதிமன்றம்!

பணத்தை இழந்த நபரின் நண்பர் ஒருவர் இந்தச் செய்தியை அறிந்து, சந்தோஷப்பட்டதுடன், தொலைத்தவரின் விவரம் குறித்தும் டாலியா பாலிடம் தெரிவித்துள்ளார். பின்னர், அவரை அழைத்துச் சென்றுபோய் டாலியாவிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். பணத்தைத் தொலைத்ததில் மிகுந்த கவலையில் இருந்த அந்த நபர், மீண்டும் அந்தப் பணம் கிடைக்கப் பெற்ற சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார். அத்துடன், டாலியாவின் நேர்மைக்கும் 50 டாலர்களைப் (இந்திய மதிப்பில் ரூ.4,156) பரிசாக வழங்கி பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து டாலியா பால், “அந்தப் பணத்தை நான் பார்த்தபோது, இதை யாரோ தவறவிட்டிருக்க வேண்டும் என எண்ணினேன். அதிலும், ‘குழந்தைகளுக்காக’ என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்தே அந்தப் பணத்தை உரிமையாளரிடம் சேர்க்கும்வகையில் சமூக வலைத்தளத்தில் அதுகுறித்த பதிவை வெளியிட்டேன். பின்னர். அந்த உரிமையாளரைச் சந்தித்தபோது பாதிக்கப்பட்டவர் கண்ணீர் சிந்தினார். பிறகு பணம் கிடைத்ததில் சந்தோஷப்பட்டார். இந்த நன்றிக்காக அவர் எனக்கு 50 டாலர்களைப் பரிசாக அளித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’அகண்ட பாரதத்தின் முதல்படி அயோத்தி ராமர் கோயில்’ - ம.பி. முதல்வர்!